புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்றம் கோடை காலத்தில் ஸ்ரீநகரிலும், குளிர் காலத்தில் ஜம்முவிலும் செயல்படுகிறது. லடாக் யூனியன் பிரதேச பகுதியைச் சேர்ந்த மக்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஸ்ரீநகர் அல்லது ஜம்முக்கு அலைய வேண்டிய சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ``லடாக்கில் உயர் நீதிமன்ற கிளையை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் லடாக்கின் குக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலன் அடைவார்கள். லடாக்கின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்துகிறது'' எனக் கூறியுள்ளார்.