இந்தியா

நேரு முதல் இப்போதைய காங்கிரஸ் தலைமை வரை வந்தே மாதரம் பாடலை எதிர்க்கின்றனர்: அமித் ஷா விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேரு முதல் இப்​போதைய காங்​கிரஸ் தலைமை வரை வந்தே மாதரம் பாடலை எதிர்க்​கின்​றனர் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா குற்​றம் சாட்டி உள்​ளார். வங்​கமொழி கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்ஜி எழு​திய வந்தே மாதரம் பாடல் இயற்​றப்​பட்டு 150 ஆண்​டு​கள் நிறைவடைந்​திருக்​கிறது.

இதையொட்டி மக்​களவை​யில் நேற்று முன்​தினம் 10 மணி நேரம் சிறப்பு விவாதம் நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து மாநிலங்​களவை​யில் வந்தே மாதரம் பாடல் குறித்து நேற்று சிறப்பு விவாதம் நடை​பெற்​றது. மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விவாதத்தை தொடங்கி வைத்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: தேசிய பாடலான வந்தே மாதரம் குறித்து நாடாளு​மன்​றத்​தில் எதற்​காக சிறப்பு விவாதம் நடத்த வேண்​டும் என்று மக்​களவை​யில் சிலர் (பிரி​யங்கா காந்​தி) கேள்வி எழுப்​பினர். மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​காகவே விவாதம் நடை​பெறுகிறது என்​றும் அவர்​கள் குற்​றம் சாட்​டினர். மே.வங்க தேர்​தலுக்​கும், சிறப்பு விவாதத்​துக்​கும் எவ்​வித தொடர்​பும் இல்லை.

வந்தே மாதரம், இந்​தி​யா​வின் தேசியப் பாடல் ஆகும். இந்த பாடல் குறித்து இளம் தலை​முறை​யினர் அறிந்து கொள்​வது அவசி​யம் ஆகும். 150 ஆண்​டு​களை நிறைவு செய்த தேசிய பாடலுக்கு மரி​யாதை செலுத்​தவே அவை​யில் சிறப்பு விவாதம் நடத்​தப்​படு​கிறது.

மக்​களவை​யில் விவாதம் தொடங்​கிய​போது ராகுல் காந்​தி​யும், பிரி​யங்கா காந்​தி​யும் அவை​யிலேயே இல்​லை. சுதந்​திர போராட்ட காலத்​தில் வந்தே மாதரம், இந்​திய மக்​களுக்கு உத்​வேகம் அளித்​தது. இந்த பாடல் இந்​தி​யா​வின் ஆன்​மாவை பிர​திபலிக்​கிறது என்று மகாத்மா காந்தி புகழாரம் சூட்​டி​னார்.

ஆனால் நேரு முதல் இப்​போதைய காங்​கிரஸ் தலை​வர்​கள் வரை வந்தே மாதரம் பாடலை எதிர்த்து வரு​கின்​றனர். இந்த உணர்வு அவர்​களின் ரத்​தத்​தில் கலந்​திருக்​கிறது. வந்தே மாதரம் பாடலை பாடாத காங்​கிரஸ் எம்​பிக்​கள் பலர் உள்​ளனர். தாயும் தாய்​நாடும் கடவுளை​விட மேலானவர்​கள் என்று பகவான் ராமர் கூறி​னார். தாய்​நாட்​டை​விட உயர்​வானது எது​வுமே கிடை​யாது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

கார்கே கருத்து: காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பேசி​ய​தாவது: கடந்த 1896-ம் ஆண்டு கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற காங்​கிரஸ் மாநாட்​டில் வந்தே மாதரம் பாடலை கவிஞர் ரவீந்​திர​நாத் தாகூர் பாடி​னார். இந்த பாடலை கடந்த 60 ஆண்​டு​களாக நான் பாடி வரு​கிறேன்.

பாடலை இயற்​றிய வங்​கமொழி கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்​ஜிக்​கும் சுதந்​திர போராட்ட வீரர்​களுக்​கும் தலை​வணங்கி வணக்​கம் செலுத்​துகிறேன்.

தேசத்​தந்தை காந்​தி​யடிகள், ஒத்​துழை​யாமை இயக்​கத்தை தொடங்​கிய​போது லட்​சக்​கணக்​கான சுதந்​திர போராட்ட வீரர்​கள், வந்தே மாதரம் பாடலை பாடியபடி சிறை சென்​றனர். அப்​போது நீங்​கள் என்ன செய்து கொண்​டிருந்​தீர்​கள்? ஆங்​கிலேயர்​களுக்கு சேவை​யாற்றி கொண்​டிருந்​தீர்​கள்.

தேசிய நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பாராக்​களை பாட காந்​தியடிகள், நேரு, மவுலானா ஆசாத், நேதாஜி, சர்​தார் படேல் உள்​ளிட்​டோர் அடங்​கிய காங்​கிரஸ் செயற்குழு கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இது, பல்​வேறு தலை​வர்​கள் ஒரு​மித்து எடுத்த முடிவு ஆகும். ஆனால் நேருவை மட்​டும் பாஜக தலை​வர்​கள் குறை கூறுகின்றனர். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT