இந்தியா

உ.பி.யில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை - சமாஜ்வாதி தேர்தல் அறிக்கை அம்சங்கள்

ரூ.5-க்கு சத்தான உணவு; விவசாயக் கடன் தள்ளுபடி, 25 லட்சம் பேருக்கு வேலை

செய்திப்பிரிவு

லக்னோ: சமாஜ்வாதி கட்​சி​யின் தேர்​தல் அறிக்கை நேற்று வெளியிடப்​பட்​டது. அதில், வேலை​யில்​லாத பட்​ட​தா​ரி​களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்​தொகை வழங்​கப்​படும் என வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

உத்​தர பிரதேச சட்​டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்​தல் நடைபெற உள்​ளது. இந்​நிலையில், சமாஜ்வாதி கட்சி தனது தேர்தல் அறிக்​கையை நேற்று வெளி​யிட்​டது. லக்னோவில் நடைபெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் கட்​சி​யின் தலை​வரும், முன்னாள் முதல்​வரு​மான அகிலேஷ் யாதவ் இதனை வெளியிட்டார்.

‘2027-க்கான உறுதி​மொழி: மக்​களின் மனதை பிரதிபலிக்​கும் தேர்தல் உறுதிப்​பத்​திரம்’ என்​கிற பெயரில் வெளி​யிடப்​பட்ட இந்த தேர்​தல் அறிக்​கை​யின் விவரம் பின்​வரு​மாறு:

* வேலை​யில்​லாத பட்​ட​தா​ரி​களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்​தொகை வழங்​கப்​படும்.

* அடுத்த ஐந்து ஆண்​டுகளில் 25 லட்​சம் அரசு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்

* பிற துறைகளில் 2 முதல் 3 கோடி வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்க இலக்கு நிர்​ணயிக்​கப்​படும்.

* ஆட்​சிக்கு வந்​ததும் உடனடி விவசாயக் கடன் தள்​ளு​படி திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

* விவசாயிகளுக்கு பாசனத்​துக்​கான இல​வச மின்​சா​ரம் வழங்​கப்​படும்.

* கரும்பு விவசாயிகளுக்கு 24 மணி நேரத்​திற்​குள் நிலு​வைத் தொகையை வழங்க ரூ.15,000 கோடி​யில் நிதி உரு​வாக்​கப்​படும்.

* கிராமப்​புற வீடுகளுக்கு 300 யூனிட் வரை இல​வச மின்​சா​ரம் வழங்​கப்​படும்.

* கிராமப்​புற உள்​கட்​டமைப்பை மேம்​படுத்த ரூ.1.5 லட்​சம் கோடி முதலீடு செய்​யப்​படும்.

* ரூ.5-க்கு உணவு வழங்​கும் வகை​யில் சமாஜ்வாதி உணவகங்​கள் திறக்​கப்​படும்.

* வறுமைக் கோட்​டுக்கு கீழ் உள்ள குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள், மூத்த குடிமக்​கள் மற்​றும் தேவையுள்​ளவர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.40,000 நிதி​யுதவி வழங்​கப்​படும்.

* வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, இலவச மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கப்படும்.

* புதிதாக 13 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் நவீன புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

* மூடப்பட்ட 26,000 ஆரம்பப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

* 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை (பிடிஏ) உள்ளடக்கிய சமூகத்தினருக்கு அரசு ஒப்பந்தங்களில் 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* 2028-ம் ஆண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT