இந்தியா

அமெரிக்க போர் விமானத்தில் பறந்த விமானப் படை தளபதி ஏ.பி.சிங்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய விமானப் படை தளபதி ஏ.பி. சிங், அமெரிக்கா​வின் எஃப்​-15 ரக போர் விமானத்​தில் பறந்​தார். பாது​காப்​புத் துறைக்​குத் தேவை​யான தளவாடங்​களைக் கொள்​முதல் செய்​வதற்​காக​வும், பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக​வும் விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங் அண்​மை​யில் அமெரிக்கா​வுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றார்.

அதிநவீன வகை: இந்​தப் பயணத்​தின் போது அமெரிக்க பாது​காப்​புத் துறை அதி​காரி​களு​டன் அவர் ஆலோ​சனை நடத்​தி​னார். இதனிடையே அமெரிக்​கா​வின் நெவாடா மாகாணத்​தில் உள்ள நெல்​லிஸ் விமானப் படை தளத்துக்கு அவர் கடந்த 9-ம் தேதி சென்​றார். அப்​போது அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த போயிங் எஃப்​-15 இஎக்ஸ் ஈகிள்-2 ரகபோர் விமானத்​தில் தளபதி ஏ.பி. சிங் ஏறி பறந்​தார். அவருடன் அமெரிக்க விமானப் படை​யின் மேஜர் மேத்யூ பென்​சன் உட்பட 2 பேர் இருந்​தனர்.

அமெரிக்க விமானப்படை​யில் இடம்​பெற்​றுள்ள அதிநவீன வகை போர் விமான​மாகும் இது. அமெரிக்​கா​வின் நவீன வகை போர் விமானத்​தின் திறன்​களை​யும் வான் போரில் அதன் பங்​கை​யும் இந்​திய விமானப் படைத் தளபதி சிறப்​பாகப் புரிந்து கொள்ள இந்​தப் பயணம் உதவிய​தாக அமெரிக்க விமானப் படை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

விமானப் படை தளபதி ஏ.பி. சிங் தனது பயணத்​தின் போது, அமெரிக்க விமானப் படை​யின் பிரி​கேடியர் ஜெனரல் டேவிட் சி.எப்​பர்​சன் உள்​ளிட்​டோரை சந்​தித்​துப் பேசி​னார். விமானப்​படை தளபதி ஏ.பி. சிங்​குடன், இந்​திய வி​மானப்​ படை​யின்​ ஏர்​ கமோடர்​ யஷ்​பால்​ நேகி​யும்​ உடனிருந்​​தார்​.

SCROLL FOR NEXT