இந்தியா

சத்தீஸ்கரில் விமான விபத்தில் 2 பைலட் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஜாஷ்பூர்: சத்​தீஸ்​கரின் ஜாஸ்​பூர் மாவட்​டத்​தில் தனி​யார் விமானம் ஒன்று மலைப்​பகு​தி​யில் விழுந்து விபத்​துக்​குள்​ளான​தில், அதில் பயணித்த இரு பைலட்​டு​களும் உயி​ரிழந்​தனர்.

தனி​யார் நிறு​வனத்தை சேர்ந்த ஒற்றை இன்​ஜின் சிறிய ரக விமானம் ஒன்று சத்​தீஸ்​கரின் ஜாஸ்பூர் மாவட்​டத்​தில் நேற்று பறந்து சென்​றது. சுமார் 30 அடி உயரத்​தில் தாழ்​வாக பறந்து சென்ற விமானம், மரத்​தில் மோதி கீழே விழுந்​த​தாக விமான விபத்தை பார்த்தவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இந்த விபத்​தில் 2 பைலட்​டு​களும் உயி​ரிழந்​தனர். விமான விபத்து நடை​பெற்ற இடத்​துக்கு மீட்பு குழு​வினர் விரைந்து சென்று மீட்பு பணி​யில்​ ஈடு​பட்​டனர்​.

SCROLL FOR NEXT