இந்தியா

பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் ஏஐ வீடியோ: எக்ஸ் சமூக வலைதளம் மீது வழக்கு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் ஏஐ வீடியோ வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலைதளம் மீது கேரள சைபர் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் பிரதமர் மோடி, தலைமைத் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை அவமதிக்கும் விதமாக ஏஐ வீடியோ தயார் செய்யப்பட்டு அது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

          

அந்த வீடியோவானது பொதுமக்களைத் திசைதிருப்பவும், அரசியலமைப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு பாதகமாகவும் இருப்பதாக கேரள சைபர் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீடியோ வெளியான எக்ஸ் சமூக வலைதள பயனாளர் லஷ்மி என் ராஜு, எக்ஸ் வலைதளம் மீது திருவனந்தபுரத்திலுள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT