இந்தியா

ஏஐ ஒழுங்​கு​முறை கலந்​தாய்வு அறிக்​கை ஒரு மாதத்தில் வெளி​யீடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற உலக வளர்ச்சி அறிக்கை வெளி​யீட்டு நிகழ்​வில் மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசி​னார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாதுகாப்​பு, டீப்ஃபேக்​கு​கள் மற்​றும் மனிதர்களுக்கு முன்​னுரிமை அளிக்​கும் அணுகு​முறை போன்ற முக்​கிய அம்​சங்​களில் கவனம் செலுத்​தி, ஏஐ ஒழுங்​கு​முறை​கள் குறித்த கலந்​தாய்வு அறிக்​கையை ஒரு மாதத்​துக்​குள் அரசு வெளியிடும். இந்த அறிக்கை ஏஐ ஒழுங்​கு​முறை​களுக்கு அடிப்​படை​யாக அமையும். இந்​தி​யா​வுக்கு அத்​தகைய ஒரு கட்​டமைப்பு அவசி​யம் தேவை.

ஏஐ பயன்​பாடு தொடர்​பான பாது​காப்பு இந்த கலந்​தாய்வு அறிக்​கை​யின் முக்​கிய அம்​ச​மாக இருக்​கும். டீப்ஃபேக்​கு​கள் உள்​ளிட்ட ஏஐ-ஆல் ஏற்​படும் தீங்​கு​கள், மனிதர்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கும் அணுகு​முறை மற்​றும் திறன் மேம்​பாடு ஆகியவை கவனம் செலுத்​தப்பட வேண்​டிய மற்ற துறை​களாக இருக்​கும்.

டீப்ஃபேக்​கு​கள் சமூகத்​தில் பெரும் பிரச்​சினை​களை ஏற்​படுத்​தக்​கூடிய ஒரு தொல்​லை​யாக உரு​வெடுத்​துள்​ளது. அது முற்​றி​லும் தவறான ஒரு கதையை உரு​வாக்​கு​கிறது. இதனால் மக்​கள் தவறான காரி​யங்​களைச் செய்​ய​வும் தவறான விஷ​யங்​களை நம்​ப​வும் தூண்​டப்​படு​கிறார்​கள். ஏஐ மற்​றும் பிற தொழில்​நுட்​பங்களை சட்​டத்​தால் மட்​டுமே ஒழுங்​குபடுத்த முடி​யாது என்று அரசு எப்​போதுமே கூறி வரு​கிறது.

எனவே, நாம் ஒரு தொழில்நுட்ப-சட்ட ரீதி​யான தீர்​வைக் கொண்​டுவர வேண்​டும். இணை​யப் பாது​காப்​பு, பயனர் பாது​காப்​பு, பயனருக்கு ஏற்​படும் பாதிப்​பு, மனநலக் கோளாறுகள் மற்​றும் டீப்ஃபேக்​கு​கள் போன்ற பிரச்​சினை​களுக்கு முதன்​மை​யான பொறுப்​பைத் தொழில்​துறை​தான் ஏற்க வேண்​டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT