புதுடெல்லி: இந்தியாவின் நடுத்தர தூரம் பாயும் அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணை, ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதுகுறித்து, பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடுத்தர தூரம் பாயும் பாலிஸ் டிக் ஏவுகணையான ‘அக்னி-4’ நேற்று (6-ம் தேதி) ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேலும், இந்த ஏவுதல் மூலம் ஏவுகணையின் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.