நடிகர் டைகர் ஷெராப்

 
இந்தியா

நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச்சூடு வழக்கு: கைதான 11 பேரில் 8 பேருக்கு அனில் பண்டிட்டுடன் நேரடித் தொடர்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்​பாக்​கிச் சூடு வழக்​கில் கைதான 11 பேரில், 2 பெண்​கள் உள்​ளிட்ட 8 பேருக்கு, தலைமறைவாக உள்ள முக்​கியக் குற்​றவாளியான அனில் பண்​டிட்​டுடன் நேரடித் தொடர்பு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

மும்​பையில் கடந்த அக்.18-ம் தேதி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தப்​பட்​டது. இதில் அவர் உயிர் தப்​பினார். இவ்வழக்​கில் மும்பை காவல் துறை இது​வரை 11 பேரை கைது செய்துள்​ளது. இந்த சம்​பவத்​தில் லாரன்ஸ் பிஷ்​னோய் கும்​பலுக்கு தொடர்பு இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. ஏற்​கெனவே கைதாகி குஜராத் சிறை​யி​லிருக்​கும் லாரன்ஸ், அங்​கிருந்​த​படி தனது கும்பலுக்கு உத்​தர​விடுவ​தாகக் கருதப்​படு​கிறது.

குறிப்​பாக, லாரன்​ஸின் நம்​பக​மானவ​ரான அனில் பண்​டிட் அமெரிக்​கா​வி​லிருந்து வரவழைக்​கப்​பட்​டுள்​ளார். அவரது உத்தரவின் பேரில் நடிகர் ஷெராப் மீது துப்​பாக்கி சூடு நடத்தப்பட்டது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இந்த வழக்கில் கைதான 11 பேரில் ராதா வர்மா மற்​றும் பபிதா ராவ் ஆகிய 2 பெண்​கள் உள்​ளிட்ட 8 பேர் அனில் பண்​டிட்​டுடன் நேரடித் தொடர்​பில் உள்​ளனர். இந்த 11 பேரும் அனி​லின் கட்​டளைப்​படி செயல்​பட்​ட​வர்​கள் என காவல் துறை வட்​டாரங்​கள் தெரிவிக்கின்றன.

இவர்​களது தொடர்பை விசா​ரித்து வரு​வதுடன், இந்​தச் சதித்திட்டம் எவ்​வாறு திட்​ட​மிடப்​பட்​டது? மற்​றும் இதில் யார் என்ன பங்கு வகித்​தனர்? என்​ப​தைக் கண்​டறிய​வும் நட​வடிக்கை மேற்​கொள்​ளப்பட்​டுள்​ளது.

இதற்​காக அவர்​களது கைப்​பேசி அழைப்​புப் பதிவு​கள், டிஜிட்​டல் தகவல் தொடர்​பு​கள் மற்​றும் பிற தொழில்​நுட்ப ஆதா​ரங்​களும் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இவர்​களில், 2 பெண்​களான ராதா மற்​றும் பபிதா, பாலிவுட் நடிகர்களைக் குறிவைக்க மும்​பையில் நோட்​ட​மிட்​ட​தாக காவல் துறை சந்​தேகிக்​கிறது. ஹரியானாவைச் சேர்ந்த இப்​பெண்​களின் கைப்​பேசிகளில் பல முக்​கிய தடயங்​கள் கிடைத்​துள்​ளன.

இப்பெண்​களுக்​கும் இந்த முழு சதித்​திட்​டம் குறித்து முன்பே தெரிந்​துள்​ளது. நகரின் பிரபல நடிகர்​கள் மற்​றும் முக்​கிய தொழிலதிபர்​களை நோட்​ட​மிட்டு, அந்​தத் தகவலை அனில் பண்டிட்​டிடம் தெரி​வித்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT