அபிஜித் திப்கேயின் தாய் அனிதா
புதுடெல்லி: என் மகன் இளம் வயதில் மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளார் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கேயின் தாய் அனிதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித்தின் தாய் அனிதா திப்கே நேற்று கூறியதாவது: இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன். அபிஜித் தாக்கப்பட்ட போது சில சமயங்களில் பயந்தேன். அவனுக்கு என்னாவாகுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டே இருந்தேன்.
அவர்கள் அவனை தாக்கினார்கள். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னால் தூங்க முடியவில்லை. அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வரை விழித்திருந்தேன். என்னால் சாப்பிடவும் முடியவில்லை.
ஜூன் 7-ம் தேதி முதல் வீட்டில் எதையும் செய்யத் தோன்றவில்லை. அபிஜித் ஒரு அற்புதமான பணியைச் செய்துள்ளார். அவர் மிகவும் இளையவர், ஆனாலும் இவ்வளவு பெரிய சாதனையை செய்துள்ளார். அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.