புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறுவதற்கான நடைமுறைகள் பலவீனமாக உள்ளன. இதனால் ஊடுருவல்காரர்கள் எளிதாக ஆதார் எண்ணை பெற்றுவிடுகின்றனர். இதை தடுக்க நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு மட்டுமே ஆதார் எண்ணை வழங்க வேண்டும். அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்படக்கூடாது.இவ்வாறு மனுவில் கோரப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.