இந்தியா

மகாராஷ்டிராவில் கதவு, பூட்டு இல்லாத வினோத கிராமம்: 300 ஆண்டுக்கு முன் ரத்தம் சிந்திய சனி பகவான் சிலையே காரணம் என தகவல்

செய்திப்பிரிவு

சனி சிங்கணாபூர்: மகாராஷ்டிராவின் அகில்​யாநகர் (முன்​னர் அகமதுநகர்) மாவட்​டத்​தில் உள்ள சனி சிங்கணாபூர் கிராம மக்கள் வீடு​களுக்​குப் பூட்டு​களோ, கதவு​களோ இன்றி வாழ்ந்து உலகையே வியப்​பில் ஆழ்த்தி வரு​கின்​றனர்.

சுமார் 300 ஆண்​டு​களுக்கு முன்​பு, கனமழை​யால் ஏற்​பட்ட வெள்ளத்​தில் பானஸ்​நாலா நதிக்​கரை​யில் பெரிய கருங்​கல் சிலை ஒன்று ஒதுங்​கியது. உள்​ளூர்​வாசி ஒரு​வர் அந்த 1.5 மீட்​டர் நீள சிலையை குச்​சி​யால் தொட்​ட​போது, அதிலிருந்து ரத்​தம் வழிந்​த​தாக நம்​பப்​படு​கிறது. அன்​றிரவே கிராமத் தலை​வரின் கனவில் தோன்​றிய சனி பகவான், அந்​தச் சிலை தன் உரு​வமே என்​றும், தன்​னைக் கூரை​யின்றி வைக்​கு​மாறும் கேட்​டுக்​கொண்​ட​தாக கூறப்​படு​கிறது.

கிராமத்தை பாது​காப்​ப​தாக அவர் கூறிய​தாக​வும் தெரிவிக்கப்பட்டுள்​ளது. அதன் பின்​னர், அந்​த சிலை திறந்த மேடை​யில் பிர​திஷ்டை செய்​யப்​பட்டு வழி​பாட்டு மைய​மானது. இந்த நம்​பிக்​கை​யின் அடிப்​படை​யிலேயே, திருடும் எவரும் தெய்வீக தண்​டனைக்கு உள்​ளா​வார்​கள் என்ற எண்​ணம் தலை​முறை தலை​முறை​யாக வேரூன்​றி​யுள்​ளது. திருடர்​கள் பார்வையிழப்​பது, ஏழரை ஆண்​டு​கள் சனி தோஷத்​தால் அவதிப்படு​வது போன்ற நம்​பிக்​கைகள் இன்​றும் நில​வு​கின்​றன.

இதன் விளை​வாக, பெரும்​பாலான வீடு​களுக்கு நிரந்தர கதவுகளோ பூட்​டு​களோ இல்​லாமல், விலங்​கு​களைத் தடுக்க மட்டும் மரப் பலகைகள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. கிராம​வாசிகளின் இந்த வழக்​கம், அங்கு இயங்​கிய அரசு நிறு​வனங்களுக்​கும் விரிவடைந்​தது. 2015-ல் திறக்​கப்​பட்ட காவல் நிலை​யத்​துக்​கும் வழக்​க​மான முன் கதவு இல்​லை.

2011-ல், யுனைடெட் கமர்​ஷியல் வங்கி தற்​போதைய யூகோ வங்​கி, கண்​ணாடிக் கதவு மற்​றும் ரிமோட் கட்​டுப்​பாட்​டிலான மின்​-​காந்தப் பூட்டு தொழில்​நுட்​பத்​துடன், இந்​தி​யா​வின் முதல் பூட்டில்லா கிளையை இங்கு தொடங்​கியது. இருப்​பினும், தெய்வ நம்​பிக்கை என்​பது திருட்டு நிகழாது என்​ப​தற்கு உத்​தர​வாதம் அல்ல என்​ப​தை​யும் நிகழ்​வு​கள் நிரூபித்​துள்​ளன.

2010-ல் ஒரு பயணி​யின் வாக​னத்​திலிருந்து ரூ.35,000 மதிப்​புள்ள பணமும் நகைகளும், 2011-ல் ரூ.70,000 மதிப்​புள்ள தங்க நகைகளும் திருடு போன​தாக செய்​தி​கள் வெளி​யா​யின. காலத்தின் மாற்​றத்​தால் இன்​றைக்​குக் கண்​காணிப்பு கேமராக்களும், பாது​காப்பு அரண்​களும் பயன்​பாட்​டுக்கு வந்​து​விட்ட போதி​லும், சனி சிங்​கணாபூரின் ‘பூட்​டற்ற கிராமம்’ என்ற பெருமை பக்​தர்​களின் அசைக்க முடி​யாத நம்​பிக்​கை​யின்​ அடையாள​மாக இன்னமும்​ தொடர்​கிறது.

SCROLL FOR NEXT