இந்தியா

பிறந்து 28 நாளே ஆன குழந்தை பங்குச் சந்தையில் முதலீடு: ஜெரோதா இணை நிறுவனர் நிதின் காமத் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிறந்து வெறும் 28 நாட்​களே ஆன குழந்தை ஒன்று பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்து அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்துள்​ளது.

இதுகுறித்​து, ஜெரோதா நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் நிதின் காமத், “எங்​களின் இளம் வாடிக்​கை​யாள​ருக்கு தற்​போது 28 நாட்கள்​தான் ஆகிறது. அந்​தக் குழந்​தை​யின் பெற்​றோர் ஜெரோதா நிறு​வனத்​தில் சிறார் கணக்​கைத் தொடங்​கினர். ஒரு வாரத்​துக்​குப் பிறகு முதல் முதலீட்​டைச் செய்​தனர்” என்று குறிப்பிட்​டுள்​ளார்.

கடந்த ஆண்டு இதே கால​கட்​டத்​தில் அவர் வெளி​யிட்ட தகவலுக்குப் பிறகு, தற்​போது இந்த புதிய சாதனை வெளியாகியுள்​ளது. அப்​போது, ஜெரோ​தா​வின் இளம் கணக்குதாரர் 64 நாட்​களே ஆன குழந்​தை​யாக இருந்​தது. ஒரே ஆண்​டில் இளம் முதலீட்​டாளரின் வயது கிட்​டத்​தட்ட பாதி​யாகக் குறைந்​துள்​ளது.

குழந்​தைகள் வளர்ந்து பெரிய​வர்​களாகும் வரை காத்​திருக்​காமல், பிறந்த சில நாட்​களி​லேயே அவர்​களுக்​காக முதலீடு செய்ய பெற்றோர் ஆர்​வம் காட்டி வரு​வதை இது உணர்த்​துகிறது. இது சமூக வலை​தளங்​களில் பலரது கவனத்தை ஈர்த்து, சுமார் 10 லட்சம் பார்​வை​களைப் பெற்​றுள்ளது.

SCROLL FOR NEXT