இந்தியா

டெல்லியில் குடியிருப்பு கட்டிட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

முதல்வர் ரேகா குப்தா இரங்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஒரு குடி​யிருப்பு கட்​டிடத்​தில் நேற்று ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 9 பேர் உயி​ரிழந்​தனர். உயிரிழந்தவர்​களின் குடும்​பத்​தினருக்கு முதல்​வர் ரேகா குப்தா இரங்​கல் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யின் விவேக் விஹார் பகு​தி​யில் உள்ள 4 மாடி கட்​டிடத்​தில் நேற்று அதி​காலை​யில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதுகுறித்து தகவல் கிடைத்​ததும், 14 தீயணைப்பு வாக​னங்​கள் சம்பவ இடத்​துக்கு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

எனினும், தீ விபத்தில் முதல் தளம், 2-வது, 3-வது தளங்களில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர். மேலும் 15 பேர் மீட்கப்பட்​டனர் என்று தீயணைப்பு அதி​காரி முகேஷ் வர்மா தெரிவித்​தார். இந்த சம்​பவம் குறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்கின்றனர்.

இதுகுறித்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில், ”தீயில் 9 பேர் உயி​ரிழந்​தது என்னை மிக​வும் துயரத்​தில் ஆழ்த்​தி​யது. காயமடைந்​தவர்கள் விரை​வில் குணமடைய பிரார்த்​தனை செய்​கிறேன். இந்த சோக​மான தருணத்​தில், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். மேலும் அவர்​களுக்கு மன வலிமையை தர வேண்​டும் என இறைவனிடம் பிரார்த்​தனை செய்கிறேன்” என கூறி​யுள்​ளார்.

ஷதாரா தொகுதி பாஜக எம்​எல்ஏ சஞ்​சய் கோயலும் உயிரிழந்தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்​த இரங்​கலை தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT