கோப்புப்படம்

 
இந்தியா

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 9 பேர் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: போதைப் பொருள் கடத்​தல் கும்​பலை சேர்ந்த 9 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

மிசோரம் - மியான்​மர் எல்​லைப் பகு​தி​யில் சர்​வ​தேச போதைப் பொருள் கடத்​தல் கும்​பலை சேர்ந்த சிலரை மிசோரம் போலீ​ஸார் அண்​மை​யில் கைது செய்​தனர். அவர்​களிடம் இருந்து சுமார் 5 கிலோ போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து மிசோரம் போலீஸ் அதி​காரி​கள் கூறும்​போது, “மிசோரமை சேர்ந்த சில நிறு​வனங்​கள், குஜ​ராத்​தின் அகம​தா​பாத்தை சேர்ந்த சில மருந்து நிறு​வனங்​களிடம் இருந்து மெத்​த​பெட்​டமைன் போதைப் பொருளை தயாரிப்​ப​தற்​கான ரசாயன மூலப் பொருட்​களை வாங்கி உள்​ளன. அவை மிசோரம் வழி​யாக மியான்​மருக்கு கடத்​தப்​பட்டு உள்​ளது. இதுதொடர்​பாக மிசோரம், குஜ​ராத் உள்​ளிட்ட மாநிலங்​களை சேர்ந்த 9 பேரை கைது செய்​துள்​ளோம்” என்றனர்.

ரூ.53 கோடி முடக்​கம்: இதனிடையே மிசோரம் போலீ​ஸார் அளித்த தகவலின்​படி மிசோரம், குஜ​ராத் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இதுதொடர்​பாக அவர்​கள் கூறிய​தாவது: மெத்​த​பெட்​டமைன் தயாரிப்​ப​தற்கு தேவை​யான ரசாயன மூலப் பொருட்​கள் குஜ​ராத்​தில் கொள்​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. இவற்றை வாங்க மிசோரம், அசாம், நாகாலாந்​து, மேற்​கு​வங்​கம், திரிபு​ரா, டெல்​லியை சேர்ந்த 21 வங்​கிக் கணக்​கு​கள் பயன்​படுத்​தப்​பட்டு உள்​ளன. இந்த வங்​கிக் கணக்​கு​களில் இருந்த ரூ.53 கோடி முடக்​கப்​பட்டுள்ளது. இதுதொடர்​பாக விரி​வான விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

சர்​வ​தேச போதைப் பொருள் கடத்​தல் கும்​பலுடன் மிசோரம், குஜ​ராத், மேற்​கு​வங்க நிறு​வனங்​களுக்கு நெருங்​கிய தொடர்பு இருக்​கிறது. குறிப்​பாக கொல்​கத்​தாவை சேர்ந்த போலி நிறு​வனங்​கள் பெயரில் சட்​ட​விரோத பணப் பரி​மாற்​றம் நடை​பெற்​றிருக்​கிறது. இதன் பின்​னணி​யில் இருக்​கும் அனை​வரும் கைது செய்​யப்​படு​வார்​கள். இவ்​வாறு அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT