இந்தியா

மும்பை பூங்காவில் காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்: பிடிபட்ட 8 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்​ளி​யில் அடைப்பு

செய்திப்பிரிவு

மும்பை: மும்​பையின் சதாரா பகுதி​யைச் சேர்ந்த 21 வயது இளைஞரும் நவிமும்​பையை சேர்ந்த 19 வயது பெண்​ணும் காதலித்து வரு​கின்​றனர். தனது காதலியை பார்க்க அந்த இளைஞர் நேற்று மும்​பைக்கு வந்​தார். மும்பை குர்லா மேற்கு பகுதி​யில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு இரு​வரும் சென்​றனர். பின்​னர் அங்​குள்ள மாநக​ராட்சி பூங்​காவை சுற்​றிப் பார்த்​தனர்.

அப்​போது காதல் ஜோடியை சுமார் 16 வயதுடைய சில சிறு​வர்​கள் கேலி, கிண்​டல் செய்து துன்​புறுத்​தினர். இருதரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதில் ஆத்​திரமடைந்த சிறு​வர்​கள், கம்​பு​கள், கற்​களால் காதல் ஜோடி மீது கொடூர தாக்​குதலை நடத்​தினர்.

ஒரு சிறு​வன் இளைஞரின் முகத்​தில் ஓங்கி குத்​தினான். இதில் நிலைகுலைந்த இளைஞரை, ஒரு சிறு​வன் பின்​னால் இருந்து வேக​மாக எட்டி உதைத்​தான். ஒரு சிறு​வன் ஸ்​டீல் பாட்​டில் மூலம் இளைஞரின் தலை​யில் பலமாக தாக்​கினான். சிறு​வர்​கள் கும்​பல், பூங்​கா​வுக்​குள் காதல் ஜோடியை ஓட, ஓட துரத்​தி​யது. இந்த தாக்​குதலில் இளைஞரும், இளம்​பெண்​ணும் காயமடைந்​தனர். இரு​வரும் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றனர்.

காதல் ஜோடியை சிறு​வர்​கள் கொடூர​மாக தாக்​கியதை ஒரு​வர் வீடியோ எடுத்து சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார். இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி உள்ளது. இதனிடையே பாதிக்​கப்​பட்ட இளைஞர் மும்பை காட்​கோபர் போலீஸ் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதன்​பேரில் போலீ​ஸார் பல்​வேறு பிரிவு​களில் வழக்​குப் பதிவு செய்து தாக்​குதல் நடத்​திய சிறு​வர்​களை தீவிர​மாக தேடினர். சில மணி நேர தேடுதல் வேட்​டை​யில் 8 சிறு​வர்​கள் பிடிபட்​டனர். அவர்​கள் சிறு​வர் சீர்​திருத்​தப் பள்​ளி​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இது​குறித்து மகாராஷ்டிர பாஜக மூத்த தலை​வர் கிரித் சோமையா சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பீனிக்ஸ் மால் அருகே உள்ள பூங்​கா​வில் இந்து நண்​பர்​கள் மீது முஸ்​லிம் அடிப்​படைவாத கும்​பல் கொடூர தாக்​குதலை நடத்தி உள்​ளது. இது​தொடர்​பாக 8 சிறு​வர்​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது. போலீஸ் சார்​பில் 5 சிறு​வர்​களின் பெற்​றோருக்கு நோட்​டீஸ் வழங்​கப்​பட்டு இருக்​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT