கேரளாவில் ஹவாலா, தங்கக் கடத்தல் வழக்கில் ஆள் மாறி சோதனை நடத்திய அமலாக்கத் துறை

கேரளாவில் ஹவாலா, தங்கக் கடத்தல் வழக்கில் ஆள் மாறி சோதனை நடத்திய அமலாக்கத் துறை
Updated on: 
1 min read

கோழிக்கோடு: கேரளாவில் தங்​கக் கடத்​தல் தொடர்​பாக நடந்த அமலாக்​கத் துறை சோதனை​யில், “அதி​காரி​கள் ஆள் மாறி என் வீட்​டில் சோதனை நடத்​தி​விட்​டனர்” என ஒரு​வர் குற்​றம்​சாட்​டியுள்​ளார்.

கேரளாவின் கோழிக்​கோடு மாவட்​டம் மடக்​க​ராவில் உள்ள நவுஷாத் என்​பவர் வீட்​டுக்கு வெள்​ளிக்​கிழமை சென்ற அமலாக்​கத் துறை குழு சோதனை நடத்​தி​யது. தங்​கக் கடத்​தல், ஹவாலா நெட்​வொர்க்​குக்கு எதிராக ஐந்து மாவட்​டங்​களில் நடந்த சோதனை​யின் ஒரு பகுதி இது​வாகும். அதி​காரி​கள் காட்​டிய பாஸ்​போர்ட் புகைப்​படத்​தில் இருந்​தவர் தான் இல்லை என்று அப்​போதே கூறிய​தாக நவுஷாத் தெரி​வித்​தார். உள்​ளூர் கவுன்​சிலரும் அக்​கம்​பக்​கத்​தினரும் அதையே கூறிய​தாகவும், ஆனாலும் சோதனை தொடர்ந்​த​தாகவும் அவர் கூறினார்.

சோதனை வாரண்​டில் நவுஷாத் வலப்​பில் என்ற பெயர் மட்​டுமே இருந்​த​தாகவும், தனது பெயர் நவுஷாத் வடக்​கேப்​புரத் என்​றும் அவர் கூறினார். அதற்கு, வீட்​டின் புகைப்​படமும் சோதனை உத்​தரவும் தங்​களிடம் இருப்​ப​தாக அதி​காரி​கள் பதிலளித்​தனர் என்​றார்.

இது​குறித்து நவுஷாத் வடக்​கேப்​புரத் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இது சோதனை​யின்​போது தயாரிக்​கப்​பட்ட பஞ்​சநாமாவின் (சம்​பவ இட ஆய்வு அறிக்கை) நகலாகும். அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் கையொப்​பமிட்ட இதில், எனது வீட்​டில் குற்​றம் சம்​பந்​தப்​பட்ட எது​வும் கிடைக்​க​வில்லை, கைப்​பற்​றவும் இல்லை என்று பதிவாகி​யுள்​ளது. இதனுடன் தொடர்​புடைய அதி​காரி உதவி இயக்​குநர் அபி​ஜித் ஆகும். சோதனை​யின்​போது அதி​காரி​கள் சில கேள்​வி​களை மட்​டுமே கேட்​டனர்.

ஜவஹர் அல்​லது இப்​ராஹிமை எனக்​குத் தெரியுமா என்று கேட்​டார்​கள். ஏதாவது அறக்​கட்​டளை அல்​லது அமைப்​புடன் தொடர்பு உண்டா என்​றும் கேட்​டார்​கள். நான் எந்த சாதி, மத அமைப்​பிலும் இருந்​ததில்லை என்று சொன்​னேன். அதன்​பிறகு வேறு எந்த முக்​கிய விசா​ரணை​யும் நடக்​க​வில்லை.

சோதனைப் பதிவை ஏற்​கும் முன், அதை மலை​யாளத்​தில் விளக்​கச் சொன்​னேன். ஆங்​கிலத்​தில் எழுதினால் போதாது. நானும் என் குடும்​பத்​தினரும் புரிந்​து​கொள்ள மலை​யாளத்​தில் மொழிபெயர்த்​துத் தர வேண்​டும் என்று கேட்​டேன்.

வீட்​டில் ஏதேனும் கைப்​பற்​றப்​பட்​டதா என்​ப​தற்கு எழுத்​துப்​பூர்வ உறுதிப்​பாடும் தேவை என்று கேட்​டேன். பின்​னர் அதி​காரி​கள் கையொப்​பமிட்ட நகலை என்​னிடம் வழங்​கினர்.

இந்​நிலை​யில் சரியான நபரின் வீட்​டுக்கே சென்​றதாகவும், முகவரி​யில் தவறு இல்லை என்​றும் அதி​காரி​கள் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்​தக் குற்​றச்​சாட்​டுக்கு அமலாக்​கத்​துறை இது​வரை வெளிப்​படை​யாக விளக்​கம் அளிக்​க​வில்லை. நவுஷாத்​தின் கூற்​றுகளின் உண்​மைத்​தன்​மையும் சரிபார்க்​கப்​பட​வில்லை.

காசர்​கோடு, கண்​ணூர், கோழிக்​கோடு, மலப்​புரம், பாலக்​காடு மாவட்​டங்​களில் அமலாக்​கத் துறை​யின் கொச்சி பிரிவு சோதனை நடத்தி வரு​கிறது. பணப் பரிமாற்​றப் பதிவு​கள், மின்​னணு சாதனங்​கள் ஆய்வு செய்​யப்​படு​கின்​றன. கைப்​பற்​றப்​பட்ட பணம், தங்​கம் குறித்த விவரங்​கள் இது​வரை வெளி​யிடப்​பட​வில்லை.

கேரளாவில் ஹவாலா, தங்கக் கடத்தல் வழக்கில் ஆள் மாறி சோதனை நடத்திய அமலாக்கத் துறை
முதல் புல்லட் ரயில் 2027-ல் இயக்கப்படும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

X