இந்தியா

வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டு 8 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்​டம் நல்​கே​தாவில் உள்ள மா பாகலா​முகி கோயில் அருகே உள்ள ஒரு நீரோடை​யில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடி உள்​ளது. அப்​போது அந்த நீரோடையை கடக்க முயன்ற ஒரு கார் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது.

இதுகுறித்து தகவல் அறிந்​ததும் மீட்​புக் குழு​வினர் சம்பவ இடத்​துக்கு விரைந்​தனர். நீரோடை​யில் சிக்​கி​யிருந்த கார் வெளியே இழுக்​கப்​பட்​டது. அதில் இருந்த 8 பேரை மீட்டு அரு​கில் உள்ள

ஒரு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​துள்​ளனர். ஆனால் அவர்​களை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் 8 பேரும் இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT