இந்தியா

சத்தீஸ்கரில் 711 குண்டுகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

பீஜாப்பூர் (சத்தீஸ்கர்): சத்​தீஸ்​கரில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்​திருந்த 711 பேரல் கிரெனேட் லாஞ்​சர் குண்​டுகளைப் பாதுகாப்​புப் படை​யினர் கைப்​பற்​றினர்.

ரகசி​யத் தகவலின்பேரில், சத்​தீஸ்​கர் மாநிலம், பீஜாப்​பூர் மாவட்ட போலீஸ், சிஆர்​பிஎஃப், கோப்ரா பட்​டா​லியன் இணைந்து, காட்​டில் தேடுதல் வேட்டை நடத்​தின.

அப்​போது, கர்​ரெகுட்டா மலை​யில் பதுக்​கப்​பட்​டிருந்த குண்​டுகள் மீட்​கப்​பட்​டன. மேலும் வெடிக்​காத குண்​டுகள், கண்​ணிவெடிகள் இருக்​கக்​கூடும் என்​ப​தால், மலைப்​பகுதி​களுக்​குச் செல்ல வேண்​டாம் என்று பொது​மக்​களைப் போலீசார் எச்​சரித்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT