ராமேசுவரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டம்? - இலங்கை அமைச்சர் தகவல்

ராமேசுவரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டம்? - இலங்கை அமைச்சர் தகவல்
Updated on: 
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் - தலைமன்​னார் இடையே கப்​பல் போக்​கு​வரத்​துக்​கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்து ஆய்வு செய்​யப்​படுவ​தாக இலங்கை நாடாளு​மன்​றத்​தில் துறைமுகங்​கள் துறை அமைச்​சர் அநுர கருணாதிலக தெரி​வித்​துள்​ளார்.

இலங்கை நாடாளு​மன்​றத்​தில் அவர் கூறிய​தாவது: இலங்கை - இந்​தியா இடையே பயணிகள் கப்​பல் சேவையை தொடங்​கு​வது குறித்து இரு நாடுகளுக்​கும் இடையே புரிந்​துணர்வு உடன்​படிக்கை 2011-ம் ஆண்​டில் கையெழுத்​திடப்​பட்​டது.

இது தொடர்​பாக இரு நாடுகளிடையே கலந்​துரையாடுவதற்கு கப்​பல் போக்​கு​வரத்து அமைச்​சகத்​தின்செய​லா​ளர் உள்​ளிட்ட பிரதி​நி​தி​களைக் கொண்ட குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இலங்​கை​யின் தலைமன்​னார், மன்​னார் மற்​றும் இந்​தி​யாவின் ராமேசுவவரம் இடையே பயணிகள் கப்​பல் சேவையை தொடங்​கு​வது தொடர்​பான சாத்​தி​யக்​கூறுகள் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளப்​படு​கிறது.

ஆய்வு அறிக்​கை​யில் கப்​பல் சேவையை தொடங்​கலாம் என பரிந்​துரைக்​கப்​பட்​டால், அதற்​கான பணிகள் தொடங்​கப்​படும். இந்த கப்​பல் சேவை மூலம் இலங்​கை​யின் வடக்கு மாகாண மக்​களுக்கு புதிய தொழில்​வாய்ப்​பு​கள் ஏற்​படும். முதலீட்டு வாய்ப்​பு​களும் கிடைக்​கும். இவ்​வாறு அவர் பேசினார்.

X