இந்தியா

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்​கில் 7,000 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்​கல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் காவல் துறை​யினர் 7 ஆயிரம் பக்​கங்​களைக் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை நேற்று தாக்​கல் செய்​தனர்.

ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கின் விசா​ரணை அதிகாரி​யான அயோத்தி நகரக் காவல் நிலைய ஆய்​வாளர் அசுதோஷ் திவாரி, சுமார் 7,000 பக்​கக் குற்​றப்​பத்​திரி​கையை நேற்று நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பித்​தார். நான்கு பெட்​டிகள் மற்​றும் ஒரு அட்​டைப் பெட்​டி​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில் காவல் துறையினர் குற்​றப்​பத்​திரி​கையை நீதி​மன்​றத்​துக்​குக் கொண்டு வந்​தனர்.

இதில் அறக்​கட்​டளை அதி​காரி​கள், வங்கி அதி​காரி​கள், பாதுகாப்புப் பணி​யாளர்​கள், சிசிடிவி இயக்​குபவர்​கள், பட்​டயக் கணக்​காளர்​கள் மற்​றும் விற்​பனை​யாளர்​கள் உட்பட 173 சாட்சிகளின் வாக்​குமூலங்​கள் இடம் பெற்​றுள்​ளன. திருட்டு சம்பவம் 105 முறை நடை​பெற்​ற​தாகக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. 803 பொருட்​கள் திருட்டு தொடர்​பான சிசிடிவி பதிவு​கள் துல்​லிய​மாக இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

86 மதிப்​புமிக்க பொருட்​கள் பெறப்​பட்​டதற்​கான விவரம் கிடைக்​கப்​பெற​வில்​லை. பணம் எண்​ணும் அறை​யில் முறை​கேடு நிகழ்ந்ததுடன் விதி​முறை​கள் மீறப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. பணம் எண்​ணும் அறைக்​குள் நுழைந்த மற்​றும் வெளி​யேறிய ஊழியர்​கள் முறை​யாக சோதனை​யிடப்​பட​வில்​லை. பணம் எண்ணும் நேரத்​தில் பாது​காப்​புப் பணி​யாளர்​கள் பணி​யில் ஈடுபடுத்​தப்​பட​வில்​லை.

மாற்று உண்​டியல்​களின் சாவி​கள், எழுத்​துப்​பூர்வ அனு​ம​தி​யின்றி முறை​சாரா முறை​யில் தடுத்து வைக்​கப்​பட்​டிருந்​தன. சிசிடிவி காட்​சிப் பதிவு​கள், நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்தை விடக் குறை​வான காலத்​துக்கே உள்​நோக்​கத்​துடன் பாது​காத்து வைக்கப்பட்டிருந்​ததும் தெரிய​வந்​துள்​ளது.

கடந்த ஜூன் 2026-ல் பதிவு செய்​யப்​பட்ட முதல் தகவல் அறிக்​கை​யின் அடிப்​படை​யில், விசா​ரணை​யின்​போது குற்​றம்​சாட்​டப்​பட்ட 8 பேருக்கு எதி​ராக வலு​வான ஆதா​ரங்​கள் சேகரிக்​கப்​பட்​டு குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்​ளன. ஒரு கார், நகைகள் மற்​றும் ரூ.79.85 லட்​சம்​ ரொக்​கம்​ ஆகிய​வை பறி​முதல்​ செய்​யப்​பட்​டதும்​ அதில்​ குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT