போபால்: அதானி சிமெண்ட் நிறுவனம், ‘ஜஹான் விஸ்வாஸ், வாஹன் சக்தி’ என்கிற பெயரில் நவராத்ரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை கொண்டாடங்களை தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தில் உள்ள கைமோர் சிமெண்ட் உற்பத்தி ஆலையில் 15,000 சிமெண்ட் மூட்டைகளைக் கொண்டு துர்கா தேவியின் உருவத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளது.
70 அடி உயரம், 70 அடி அகலத்தில் (4,900 சதுர அடி பரப்பளவு) 750 டன் எடை கொண்ட 15,000 அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் மூட்டைகளை பயன்படுத்தி இந்த கலைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தரையில் இருந்து பார்க்கும்போது, மிகத் துல்லியமாக அடுக்கப்பட்ட தனித்தனி அலகுகளாகக் காட்சியளிக்கும் சிமெண்ட் மூட்டைகள், ‘ஏரியல் வியூ’ என்று அழைக்கப்படும் வானில் இருந்து அல்லது உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது, துர்கா தேவியின் பிரம்மாண்டமான வடிவமாக காட்சியளிக்கின்றன.
இந்த கலைப்படைப்பு உருவான பயணத்தையும், அதன் பிரம்மிப்பான வான்வழி காட்சியையும் பின்னணி இசை, உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றுடன் ஒரு குறும்படம் போல தயாரித்து, அதானி சிமெண்ட் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.