இந்தியா

கர்​நாட​கா​வில் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயி​ரிழப்பு

இரா.வினோத்

பெங்​களூரு: கர்​நாடக மாநிலம் தார்​வாட் மாவட்​டத்தை சேர்ந்த சஞ்​சீவ் அங்​காடி (33) நேற்று முன் தினம் இரவு தனது நண்​பர்​கள் 9 பேருடன் உத்தர கன்னட மாவட்​டத்​தில் உள்ள தர்​மஸ்​தலா கோயிலுக்கு வேனில் சென்​றார்.

அதி​காலை 1.30 மணி​யள​வில் எல்​லாப்​பூரை அடுத்​துள்ள பாலகராகிராஸ் அருகே சென்று கொண்​டிருந்த போது எதிரே வந்த லாரி மீது வேன் வேக​மாக மோதியது. இதனால் ஏற்​பட்ட கோர‌ விபத்​தில் சஞ்​சீவ் அங்​காடி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தனர். ஒரு​வர் மருத்​து​வ​மனைக்கு செல்லும் வழி​யில் உயி​ரிழந்​தார்.

இந்த விபத்​தில் படு​காயமடைந்த 2 பேர் ஹுப்​ளி​யில் அரசு மருத்து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த சம்​பவம் குறித்து தகவலறிந்த எல்​லாப்​பூர் போலீ​ஸார், விபத்து நிகழ்ந்த இடத்​துக்கு வந்து உயி​ரிழந்​தவர்​களின் உடல்களை மீட்டு உடற்​கூ​ராய்​வுக்கு அனுப்பி வைத்​தனர்.

இது குறித்து பிஎன்​எஸ் சட்ட பிரிவு​கள் 281 (பொதுச் சாலை​யில் அஜாக்​கிரதை​யாக வாக​னம் ஓட்​டு​தல்), 125 (2) (மற்​றவர்​களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்​கும் செயல்) மற்​றும் 106 (1) (கவனக்குறை​வால் மரணத்தை ஏற்​படுத்​துதல்) ஆகிய பிரிவு​களின் கீழ் வழக்​குப் ​ப​திவு செய்து போலீஸார் விசா​ரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT