இந்தியா

மேற்கு வங்கத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முதல் கட்ட வாக்​குப் பதி​விற்கு இன்​னும் சில நாட்​களே உள்ள நிலை​யில், மாநில வாக்​காளர் பட்​டியலில் புதி​தாக சுமார் 7 லட்​சம் வாக்காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாகத் தேர்​தல் ஆணைய அதிகாரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

புதி​தாகச் சேர்க்​கப்​பட்​டுள்ள வாக்​காளர்​களில், சுமார் 3.22 லட்​சம் பேர் முதற்​கட்​டத் தேர்​தலிலும், 3.88 லட்​சம் பேர் இரண்​டாம் கட்​டத் தேர்​தலிலும் வாக்​களிக்க உள்​ளனர். எனினும், இவர்​களில் முதல்​முறை வாக்​களிக்​கும் 18 வயது இளைஞர்​கள் எத்​தனை பேர் மற்றும் பாலின வாரி​யான விவரங்​கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

SCROLL FOR NEXT