இந்தியா

ஆந்​திராவில் லாரியில் வெடிபொருட்கள் வெடித்து 7 பேர் உயிரிழப்பு

என். மகேஷ்குமார்

அனந்தகிரி: ஆந்​திராவில் லாரி​யில் வைக்​கப்​பட்​டிருந்த வெடிபொருட்​கள் வெடித்து சிதறி 7 பேர் உயி​ரிழந்​தனர்.

ஆந்​திராவின் அல்​லூரி சீதா​ராம ராஜு மாவட்​டம், அனந்​தகிரி மண்​டலம், பினகோட்டா பகுதி​யில் சாலை பணி நடை​பெறுகிறது. இதற்​காக லாரி​களில் ஜல்லி கற்​கள் கொண்டு வரப்​படு​கிறது. ஒரு லாரி​யில் டீசல் தீர்ந்து விட்​ட​தால் அதன் ஓட்​டுநர் பெட்​ரோல் நிலை​யத்​தில் இருந்து டீசல் வாங்கி வந்​தார். அந்த டீசலை, அவர் லாரி​யில் நிரப்பி கொண்​டிருந்​தார்.

கல் குவாரிக்கு பயன்​படுத்​தப்​படும் வெடிபொருட்​கள் லாரி​யில் இருந்​தன. டீசல் நிரப்​பியபோது எதிர்​பாராத​வித​மாக வெடிபொருட்​கள் வெடித்​துச் சிதறின. இந்த விபத்​தில் லாரி, அதன் அரு​கில் நின்​றிருந்த ஆட்டோ கடுமையாக சேதமடைந்​தன.

சாலை பணி​யில் ஈடு​பட்​டிருந்த மணி, நாராயணா, பவன்​குமார் உள்​ளிட்ட 5 தொழிலா​ளர்​கள் மற்​றும் லாரி ஓட்​டுநர் என 6 பேர் சம்​பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். அந்த வழி​யாக பள்​ளிக்கு சென்று கொண்​டிருந்த அரசு பள்ளி ஆசி​ரியை சுனிதாவும் படுகாயம் அடைந்​தார். மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் அவர் உயி​ரிழந்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT