பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் கிராமத்தில் போட்டியின்றி தேர்வாகிய 86 வயது மூதாட்டி

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் கிராமத்தில் போட்டியின்றி தேர்வாகிய 86 வயது மூதாட்டி
Updated on: 
1 min read

புதுடெல்லி: ராஜஸ்தானின் பார்​மர் மாவட்​டக் கிராமப் பஞ்​சாயத்து தலை​வர் பத​விக்கு தொடர்ந்து ஏழாவது முறை​யாக 86 வயது மூதாட்டி தேர்​வாகி உள்​ளார். அவர் போட்​டி​யின்றி தேர்​வாகி வரு​வ​தால் 42 வருடங்​களாக அக்​கிராமத்​தில் தேர்​தலே நடை​பெறவில்லை.

ராஜஸ்தானில் பஞ்​சாயத்​துத் தேர்​தல் நடை​பெறுகிறது. இதில், போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் வீடு வீடாக பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இதுபோன்ற கடும் போட்டி சூழலில், பார்​மர் மாவட்ட வீரேந்​தர் நகர் கிராமப் பஞ்​சாயத்​திற்கு மட்​டும் ஒரு வித்​தி​யாச​மான வேட்​பாளர் தலை​வ​ராகப் போட்​டி​யின்றி தேர்​வாகி உள்​ளார். அவர் முன்​னாள் மாநில அமைச்​சரான ஹேம​ராம் சவுத்​ரி​யின் மனைவியான 86 வய​தான பிகி தேவி.

அவர் 7-வது முறை​யாக தொடர்ந்து அப்​ப​த​விக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். ஒட்​டுமொத்த கிராம மக்​களும் மீண்​டும் ஒரு​மனதாக ஒன்​றிணைந்து, கிராமத்​தின் பொறுப்பை பிகி தேவி​யிடம் ஒப்​படைத்​துள்​ளனர். இத​னால், கடந்த 42 வருடங்​களாக வீரேந்​திர நகர் கிராமத்​தில் பஞ்​சாயத்து தேர்​தலே நடை​பெறவில்லை. இத​னால், அங்கு தேர்​தல் பிரச்​சா​ர​மும் நடை​பெற்​றதில்லை. பிகி தேவி​யின் வெற்றி வட மாநிலங்​களில் பேசுபொருளாகி உள்​ளது.

பிகி தேவி முதன்​முதலில் 1984-ம் ஆண்டு வீரேந்​திர நகர் கிராம பஞ்​சாயத்து தலை​வர் பத​விக்கு போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். அன்றுமுதல் நான்கு தசாப்​தங்​களாக, அவருக்கு எதிராக யாரும் வேட்​புமனு தாக்​கல் செய்​ய​வில்லை.

இம்​முறையும், அவருக்கு எதிராக யாரும் போட்​டி​யிட​வில்லை. இதையடுத்து, தேர்​தல் நடத்​தும் அதி​காரி அவரை அதி​காரப்​பூர்​வ​மாக போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வ​ராக அறி​வித்​தார்.

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் கிராமத்தில் போட்டியின்றி தேர்வாகிய 86 வயது மூதாட்டி
பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து தொடர்: மதுரை அணி சாம்பியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in