இந்தியா

குஜராத்: தினசரி வட்டி தருவதாகக் கூறி 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,200 கோடி மோசடி

செய்திப்பிரிவு

அம்ரேலி: தினசரி வட்டி தரு​வ​தாகக் கூறி நாடு முழு​வதும் 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,200 கோடிக்​கும் அதி​க​மான தொகை மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது.

குஜராத்​தின் மெக்​சனா நகரைச் சேர்ந்​தவர் தாவல் படேல் (40). கடந்த 2024-ம் ஆண்​டில் அவர் எஸ்டி பே, அப்னா பே ஆகிய இரு செயலிகளை தொடங்​கினார். இந்த செயலிகள் வாயி​லாக முதலீடு செய்​யப்​படும் தொகைக்கு தினசரி வட்டி வழங்​கப்​படும் என்று அவர் அறி​வித்​தார்.

இதை நம்பி பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த 6.52 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ரூ.1,000 முதல் பல லட்​சங்​கள் வரை முதலீடு செய்தனர். கடந்த சில மாதங்​களுக்கு முன்பு எஸ்டி பே, அப்னா பே செயலிகள் திடீரென செயல் இழந்​தன.

பாதிக்​கப்​பட்ட பெரு முதலீட்​டாளர்​கள் குஜராத், ராஜஸ்​தான், மத்​திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்​களின் போலீஸ் நிலை​யங்​களில் புகார் அளித்தனர். குஜராத்​தின் அம்​ரேலி போலீஸ் நிலை​யத்​தில் ஏராளமான புகார்​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

அம்​ரேலி போலீஸ் நிலை​யம் சார்​பில் தனிப்​படை அமைக்​கப்​பட்டு விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. தனிப்​படை போலீஸ் அதி​காரி​கள் கூறிய​தாவது: தினசரி வட்டி கிடைக்​கும் என்ற ஆசை வார்த்​தையை நம்பி எஸ்டி பே, அப்னா பே செயலிகளில் 6.52 லட்சம் பேர் முதலீடு செய்​துள்​ளனர். இதன்​மூலம் ரூ.1,211 கோடி வரை மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது. இதேபோல நாடு முழு​வதும் ஏராளமானோர் ஏமாந்து உள்​ளனர்.

மிக அதி​கபட்​ச​மாக குஜராத்​தில் 1.52 லட்​சம் பேர் பணத்தை இழந்துள்​ளனர். ராஜஸ்தானில் 1.36 லட்​சம் பேரும், மகாராஷ்டிராவில் 74,000 பேரும், உத்​தர பிரதேசத்​தில் 45,000 பேரும், பிஹாரில் 31,000 பேரும், மத்​திய பிரதேசத்​தில் 30,000 பேரும் மோசடி செய்​யப்​பட்டு உள்​ளனர். மோசடி​யின் மூளை​யாக செயல்​பட்ட தாவல் படேல் கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு கைது செய்​யப்​பட்​டார்.

அவரது கூட்​டாளி​கள் 11 பேரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். மோசடி செய்​யப்​பட்ட பணம் 7 போலி நிறு​வனங்​களுக்கு மாற்​றப்​பட்டு உள்​ளது. இது​தொடர்​பாக தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு பணத்தை மீட்க நட​வடிக்கை எடுத்து வரு​கிறோம். இவ்​வாறு தனிப்​படை போலீஸ் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT