கோப்புப்படம்

 
இந்தியா

600 தெரு நாய்கள் படுகொலை: தெலங்கானாவில் வழக்கு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றபோது, தாங்கள் வெற்றி பெற்றால் தெரு நாய்களை ஒழிப்பதாக வேட்பாளர்கள் சிலர் வாக்குறுதி கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், காமாரெட்டி, ஹனும கொண்டா உள்ளிட்ட மாவட்டங்களில், ஷாயம்பேட், ஆரேபல்லி, பால்வஞ்சா உள்ளிட்ட 7 பஞ்சாயத்துக்களில் கடந்த 15 நாட்களில் 600-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு சிலர் விஷ ஊசி செலுத்தியும், சாப்பாட்டில் விஷம் வைத்தும் படுகொலை செய்து, குழி தோண்டி புதைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சில நாட்களில் இந்த விஷயம் தெரியவந்ததைத் தொடர்ந்து, புளூ கிராஸ் அமைப்பினர் மற்றும் நாய் பிரியர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, புதைக்கப்பட்ட தெரு நாய்களின் உடல்களை மீட்டு அவற்றுக்கு பிரேதப் பரிசோதனை செய்தனர். இது தொடர்பான விசாரணையில், ஜகத்தியால் மாவட்டம், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட ஒரு இடத்தில் ஒருவர் பகிரங்கமாக தெரு நாய்களுக்கு விஷ ஊசி செலுத்துவதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT