இந்தியா

நாசிக்-சோலாபூர்-அக்கல்கோட் இடையே ரூ.19,142 கோடி மதிப்பில் 6 வழித்தட திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ம​கா​ராஷ்டி​ரா​வில் ரூ.19,142 கோடி செல​வில் அமைக்​கப்பட உள்ள நாசிக்​-சோலப்​பூர்​-அக்​கல்​கோட் 6 வழித்தட கட்​டு​மான திட்​டத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று நடை​பெற்ற பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சர​வைக் குழு கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

நாசிக்​-சோலப்​பூர்​-அக்​கல்​கோட் இடை​யில் 374 கி.மீ. தூரத்​துக்கு அமைக்​கப்பட உள்ள இந்த பசுமைவழி அணுகல் திட்​டம் பிஓடி (சுங்​கச்​சாவடி) முறை​யில் கட்​டப்பட உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

இந்​தத் 6 வழித்தட திட்​டம் நாசிக், அகில்​யநகர், சோலாப்​பூர் போன்ற முக்​கிய பிராந்​திய நகரங்​களை கர்​னூலுடன் இணைத்து போக்​கு​வரத்து வசதியை வழங்​கும்.

ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து உள்​கட்​டமைப்பு மேம்​பாட்​டிற்கு இது சிறந்த எடுத்​துக்​காட்​டாக அமை​யும். முன்​மொழியப்​பட்ட இந்த 6 வழித்தட திட்​டம் மேற்கு கடற்​கரையி​லிருந்து கிழக்கு கடற்​கரை வரை நேரடி இணைப்பை வழங்​கும். இது பயண நேரத்தை 17 மணிநேரம் குறைக்​கும், பயண தூரத்தை 201 கி.மீ குறைக்​கும்.

சென்னை துறை​முக முனை​யத்​திலிருந்​து, திரு​வள்​ளூர், ரேணி​குண்​டா, கடப்பா மற்​றும் கர்​னூல் வழி​யாக ஹசாப்​பூர் (மகா​ராஷ்டிரா எல்​லை) வரை 4-வழிச் சாலைகள் (700 கி.மீ நீளம்​) ஏற்​கெனவே கட்​டு​மானத்​தில்​ உள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT