இந்தியா

12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா, குஜராத், மத்திய பிரதேசம், கோவா ஆகிய 9 மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இப்பணி முற்றிலும் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி எஸ்ஐஆர் பணி தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போது, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 51 கோடியாக இருந்தது. எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு, வாக்காளர் எண்ணிக்கை சுமார் 44.92 கோடியாக உள்ளது. இது 6.08 கோடி குறைவு.

          

முதல்கட்டமாக பிஹாரில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, 2-ம் கட்டமாக மேற்கூறிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்துள்ளது. அசாம் மாநிலத்தில், எஸ்ஐஆர்-க்குப் பதிலாக ஒரு சிறப்புத் திருத்தம் பிப்ரவரி 10-ம் தேதி நிறைவடைந்தது.

இப்போது நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல் முடிவடைந்த பிறகு, மீதமுள்ள 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT