இந்தியா

கடுமையான வெயில் தாக்கத்தால் ஆந்திரா, தெலங்கானாவில் ஒரே நாளில் 55 பேர் உயிரிழப்பு

என்.மகேஷ்குமார்

அமராவதி: கடுமையான வெயிலால் ஒரே நாளில் ஆந்​தி​ரா​வில் 21 பேரும், தெலங்​கா​னா​வில் 34 பேரும் உயி​ரிழந்​துள்​ளனர்.

ஆந்​தி​ரா​வில் கோடை வெயில் சுட்​டெரிக்​கிறது. இதன் காரண​மாக கடந்த வெள்​ளியன்று மட்​டுமே இம்​மாநிலத்​தில் 21 பேர் வெயி​லின் தாக்​கம் தாள முடி​யாமல் சுருண்டு விழுந்து உயி​ரிழந்​தனர். இதில் விஜய​வா​டா​வில் 10 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இதில் 8 பேர் ஊர், பெயர் தெரி​யாத யாசகர்​கள். ஏலூரு, மேற்கு கோதாவரி, குண்​டூர் என இப்​பகு​தி​களில் மொத்​தம் 21 பேர் உயி​ரிழந்​தனர். இதேபோன்று தெலங்​கானா மாநிலத்​தி​லும் 34 பேர் வெயில் தாக்​கத்​தால் இறந்​துள்​ளனர் என தெரிய​வந்​துள்​ளது. கரீம் நகர், அதிலா​பாத், ரங்​காரெட்​டி, நல்​கொண்​டா, பெத்​த​பல்​லி, ஜெய்​சங்​கர் பூபாலபல்​லி, வாரங்​கல், மகபூ​பா​பாத், யாதாத்ரி புவனகிரி என தெலங்​கானா மாநிலத்​தில் பரவலாக மொத்​தம் 34 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.4 லட்​சம் உதவி தொகை வழங்​கு​வ​தாக தெலங்​கானா மாநில அரசு அறி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில், நேற்று ஆந்​தி​ரா​வில் திருப்​ப​தி, சித்​தூர், நெல்​லூர், கடப்பா ஆகிய பகு​தி​களில் அதி​காலை முதலே லேசான மழை பெய்​தது. இதனால் மட்​டும் வெயி​லின் தாக்​கம் சற்​று குறைந்​தது.

SCROLL FOR NEXT