டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 4 மணிநேர நிலவரப்படி 42.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பிரச்சாரம் செய்தார்.
அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் பிறகு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.
இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 4 மணி நிலவரப்படி 42.70 சதவீத சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தவறவிடாதீர்