அஜ்மல் 
இந்தியா

பார்த்துப் பேசுங்கள்; தேவைப்பட்டால் அணி மாறலாம்: பாஸ்வானுக்கு அறிவுரை கூறிய அஜ்மல்

செய்திப்பிரிவு

நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தால் ஆட்சி மாறினால் கூட நீங்கள் பதவியை பெற முடியும் என சிராக் பாஸ்வானுக்கு அசாம் எம்.பி. அஜ்மல் அறிவுரை கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் பேசினார். அப்போது அவர் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பேசினார்.

இதனைத் தொடர்ந்து அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரும், அசாம் மாநில எம்.பி.யுமான பத்ருதீன் அஜ்மல் பேசினார்.

சிராக் பாஸ்வான்

அப்போது மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும், அவரது மகன் சிராக் பாஸ்வானும் அவையில் இருந்தனர். சிராக் பாஸ்வானை சுட்டிக்காட்டி அஜ்மல் பேசியதாவது:

மத்தியில் எந்த அரசு பதவியேற்றாலும் அந்த அமைச்சரவையில் உங்கள் தந்தை ராம்விலாஸ் பாஸ்வானை பார்க்க முடிகிறது. யாரையும் பகைத்துக் கொள்ளாதவர்.

அதேபோன்று நீங்களும் மத்தியில் ஆளும் எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசாதீர்கள். நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தால் ஆட்சி மாறினால் கூட நீங்கள் பதவியை பெற முடியும். ஆளும் கட்சியை பாராட்டி, எதிர்க்கட்சியை விமர்சிக்காதீர்கள்’’ எனக் கூறினார்.

தவறவிடாதீர்கள்...

SCROLL FOR NEXT