இந்தியா

எஸ்ஐஆர் பணியில் 500 நீதிபதிகள்: மேற்கு வங்க நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை கடும் பாதிப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்​புப் பணி​யில் 500-க்​கும் மேற்​பட்ட கீழ் நீதி​மன்ற நீதிப​தி​கள் மற்​றும் அதி​காரி​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ள​தால், மாநிலம் முழு​வதும் வழக்கு விசா​ரணை​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

இது குறித்​துச் சிறப்பு அரசு வழக்​கறிஞர் பிவாஸ் சாட்​டர்ஜி கூறுகை​யில், "கடந்த பிப்​ர​வரி மாதம் வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியலில் சந்​தேகத்​திற்​குரியவை என வகைப்​படுத்​தப்​பட்ட பெயர்​களை ஆய்வு செய்​யும் சிறப்​புத் தீவிரத் திருத்​தப் பணி​யில் (எஸ்​ஐஆர்) 500 நீதிப​தி​கள் ஈடு​பட்​டுள்​ளனர்.

          

இதன் விளை​வாக, கடந்த 2025-ம் ஆண்​டில் 62 சதவீத​மாக இருந்த கீழ் நீதி​மன்​றங்​களின் வழக்​குத் தீர்வு விகிதம், இந்த மார்ச் மாதத்​தில் 42 சதவீத​மாக சரிவை சந்​தித்​துள்​ளது. இதனால் வழக்​கு​களைத் தீர்த்து வைக்​கும் வேகம் பெரு​மளவு குறைந்து கோப்​பு​கள் தேங்​கு​வது அதி​கரித்​துள்​ளது.

மாவட்ட நீதி​மன்ற தரவு​களின்​படி, மார்ச் மாதத்​தில் மாநிலம் முழு​வதும் 90,685 வழக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. ஆனால், அவற்​றில் 38,527 வழக்​கு​கள் மட்​டுமே முடித்து வைக்​கப்​பட்​டுள்​ளன. கொல்​கத்​தா​வில் இந்த விகிதம் இன்​னும் மோச​மாக 39 சதவீத​மாக உள்​ளது. மேற்கு வர்த்​த​மானில் மிகக் குறைந்த அளவாக 19 சதவீத வழக்​கு​கள் மட்​டுமே தீர்க்​கப்​பட்​டுள்​ளன.

விசா​ரணை​ தாமத​ம்: ஏராள​மான நீதிப​தி​கள் தேர்​தல் பணி​யில் இருப்​ப​தால் கொலை, பாலியல் வன்​கொடுமை மற்​றும் போக்சோ சட்​டத்​தின் கீழான முக்​கிய வழக்கு விசா​ரணை​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. பிணை மனுக்​கள் மீதான விசா​ரணை​யும் தாமத​மாகிறது. விரைவு நீதி​மன்ற நீதிப​தி, தற்​போது கூடு​தல் பொறுப்​பாக நான்​கைந்து நீதி​மன்​றங்​களைக் கவனிக்க வேண்​டி​யுள்​ளது. இதனால் விசா​ரணைக்​குத் தேதி​கள் கிடைப்​ப​தில் சிக்​கல் நீடிக்​கிறது" என்​றார்.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 23 மற்​றும் 29 தேதி​களில் இரு​கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. தேர்​தல்​ முடிவு​கள்​ மே 4-ம்​ தேதி வெளி​யாக உள்​ளன.

SCROLL FOR NEXT