இந்தியா

ஆந்திர மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 தமிழர் உட்பட 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பதி: ஆந்​திர மாநிலம் திருப்​பதி மாவட்​டம், வரதய்யபாளையம் அருகே உள்ள சிட்டி பகு​தி​யில் பல்​வேறு தொழிற்​சாலைகள் இயங்கி வரு​கின்​றன.

அதன்​படி, ‘டாப்​ளட்ஸ் இந்​தியா’ (டிஐஎல்) மருந்து உற்​பத்தி தொழிற்​சாலை செயல்​பட்டு வரு​கிறது. நேற்று காலை 8.30 மணி​யள​வில் இந்த தொழிற்​சாலை​யில் உள்ள பாய்லர் திடீரென வெடித்​தது. இதில் தொழிற்​சாலை கட்​டிடம் இடிந்து விழுந்​தது. அப்​போது அங்கு பணி​யில் இருந்த 5 தொழிலா​ளர்​கள் இடி​பாடு​களில் சிக்​கினர்.

மீட்புப் பணியின்போது 3 பேர் பிண​மாக மீட்​கப்​பட்ட நிலை​யில், 2 பேர் படு​கா​யங்​களு​டன் மீட்​கப்​பட்​டனர். அவர்​கள் இரு​வரும் உடனடி​யாக தடா அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு சேர்க்​கப்​பட்​டனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்​கள் இரு​வரும் உயி​ரிழந்​தனர். இதில் 2 பேர் தமிழ்​நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

இந்​நிலை​யில், இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.50 லட்​சம் வழங்​கு​வதுடன் பிள்​ளை​களின் கல்​விச் செலவை ஏற்​ப​தாக டிஐஎல் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. இந்த விபத்து தொடர்​பாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​தார். இந்த சம்​பவம் குறித்து சிட்டி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT