ஸ்மிருதி இரானி | பிர​காஷ் ஜவடேகர் | ரமேஷ் பொக்​ரி​யால் நிஷாங்க் | தர்மேந்திர பிரதான்

 
இந்தியா

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 12 ஆண்டுகளில் 4-வது முறையாக கல்வி அமைச்சர் மாற்றம்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக தலை​மையி​லான 12 ஆண்டு கால ஆட்​சி​யில் 4-வது முறையாக கல்வி அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்மிருதி இரானி, பிர​காஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்​ரி​யால் நிஷாங்க், தர்மேந்திர பிரதான் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது 5-வது கல்வி அமைச்​ச​ராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்​று உள்​ளார்.

ஸ்மிருதி இரானி (2014- 16): கடந்த மே 2014-ல் பாஜக அரசு பதவியேற்​ற​போது ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்​ச​ரா​னார். அந்த நேரத்​தில், கல்வி தொடர்​பான கொள்​கைகளுக்கு இந்த அமைச்​சகமே பொறுப்​பாக இருந்​தது.

2020-ல் கல்வி அமைச்​சகம் எனப் பெயர் மாற்​றப்​பட்​டது. அவரது பதவிக் காலத்​தின் மிகப்​பெரிய முடிவு​களில் ஒன்​றாக, முந்​தைய காங்​கிரஸ் அரசால் 2013-ல் அறி​முகப்​படுத்​தப்​பட்ட டெல்லி பல்​கலைக்​கழகத்​தின் 4 ஆண்டு இளங்​கலைப் பட்​டப்​படிப்பு திட்​டம் திரும்​பப் பெறப்​பட்​டது.

மேலும், தேசிய கல்விக் கொள்​கையை வரைவு செய்​யும் பணி​யை தொடங்​கிய இரானி, 2015-ல் தேசிய நிறுவன தரவரிசைச் சட்டத்தை​யும் (என்​ஐஆர்​எப்) அறி​முகப்​படுத்​தி​னார்.

எனினும், 2016-ல் ஜவஹர்​லால் நேரு பல்​கலைக் ​கழக வளாகத்​தில் நடைபெற்ற போராட்​டத்​தில் பங்​கேற்ற மாணவர் சங்க தலை​வர் கன்​னையா குமார் கைது செய்​யப்​பட்​டது சர்ச்​சை​யானது. அதே ஆண்​டில் ஹைத​ரா​பாத் பல்​கலைக்​கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்​கொலை விவ​கார​மும் விமர்சனத்துக்குள்ளானது.

பிர​காஷ் ஜவடேகர் (2016- 19): 2016-ல் ஸ்மிருதி இரானி ஜவுளித் துறைக்கு மாற்​றப்​பட்​டார். மனிதவள மேம்​பாட்​டுத் துறை பிர​காஷ் ஜவடேகருக்கு வழங்​கப்​பட்​டது. அவரது பதவிக்​காலத்​தின் மிக முக்​கிய​மான முடிவு​களில் ஒன்று 2017-ம் ஆண்டு இந்​திய மேலாண்மை நிறு​வனங்​கள் சட்​டம் இயற்​றப்​பட்​டது.

அதே ஆண்​டில் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நிறு​வப்​பட்​டது. எனினும் 2018-ல் 10 (கணிதம்) மற்​றும் 12-ம் வகுப்பு (பொருளா​தா​ரம்) வினாத்​தாள் கசிந்த விவ​காரம் பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது.

பொக்​ரி​யால் (2019 - 21): கடந்த 2019 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக மீண்​டும் வெற்றி பெற்​றதையடுத்​து, ரமேஷ் பொக்​ரி​யால் நிஷாங்க் மனிதவள மேம்​பாட்​டுத் துறை அமைச்​ச​ரா​னார். அவரது பதவிக்​காலத்​தின் மிகப்​பெரிய சாதனை​யாக, தேசிய கல்விக் கொள்கை 2020 அங்​கீகரிக்​கப்​பட்​டது.

ஜவஹர்​லால் நேரு பல்​கலைக்​கழகம், பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகம் உள்​ளிட்ட சுமார் 40 மத்​திய பல்​கலைக்​கழகங்​களில் பாதி இடங்​களுக்கு நிரந்தர துணைவேந்​தர்​கள் இல்​லை.

அதே​போல், 5 ஐஐடி.க்களும் முழுநேர இயக்​குநர்​கள் இன்றி செயல்​பட்​டன. ரமேஷ் பொக்ரியாலுக்கு மே 2021-ல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்​நலக்​குறைவை காரணம் காட்டி 2021, ஜூலை 21-ல் பதவி வில​கி​னார்.

தர்​மேந்​திர பிர​தான் (2021- 26): ரமேஷ் பொக்​ரி​யால் பதவி விலகியதைத் தொடர்ந்​து, 2021-ல் தர்​மேந்​திர பிர​தான் கல்வி அமைச்​ச​ரா​னார். அவர் சுமார் 5 ஆண்​டு​கள் இப்​ப​த​வி​யில் நீடித்தார். இதன் மூலம் என்​டிஏ ஆட்​சி​யின் கீழ் 3 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய ஒரே கல்வி அமைச்​சர் என்ற சிறப்​பைப் பெற்றார்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடை​முறைப்​படுத்​து​வ​தில் தர்​மேந்​திர பிர​தான் கவனம் செலுத்​தி​னார். இருப்​பினும், நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு, முக்​கிய​மான தேர்​வு​கள் ரத்து செய்யப்​பட்​டது போன்றவற்றுக்​கு எதி​ராக போ​ராட்​டம்​ தீவிரமடைந்​த​தால்​ நேற்​று ​முன்​தினம்​ பதவி விலகி​னார்​.

SCROLL FOR NEXT