இந்தியா

உ.பி.யில் மோசடி கும்பலிடம் சிக்கிய 453 நேபாள நாட்டினர் மீட்பு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்​தர பிரதேசத்​தில் மோசடி கும்​பலிடம் சிக்​கி​யிருந்த 453 நேபாள குடிமக்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​திய எல்​லைப் பகு​தி​களில் நேபாள நாட்​டினரின் உழைப்பு சுரண்​டப்​படு​வ​தாக​வும் அந்​நாட்​டினர் மோசடி செயலில் ஈடுபடுத்தப்​படு​வ​தாக​வும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரின் பல இடங்​களில் காவல் துறை​யினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

இதில் மோசடி கும்​பலின் பிடி​யில் இருந்த 115 பெண்​கள் மற்​றும் 338 ஆண்​கள் உட்பட மொத்​தம் 453 நேபாள குடிமக்​கள் மே 29ம் தேதி மீட்​கப்​பட்​டு, அடுத்​த கட்ட நடவடிக்​கைகளுக்​காக ரூபந்​தேஹி மாவட்ட காவல் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டனர். இந்த மோசடி வலை​யமைப்​பில் தொடர்பு இருப்​ப​தாக சந்​தேகிக்​கப்​படும் 6 பெண்​கள் உட்பட 19 பேரை அதி​காரி​கள் காவலில் எடுத்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இது குறித்து டெல்​லி​யில் உள்ள நேபாள தூதரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், "உத்தர பிரதேச காவல் துறை, இந்​திய அரசின் புல​னாய்வு முகமை​கள் மற்​றும் ‘கின் இந்​தி​யா'தொண்டு நிறுவனம் ஆகிய​வற்​றின் ஒருங்​கிணைப்​போடு இந்த மீட்பு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது" எனக் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த மீட்​புப் பணிக்கு உதவிய உத்தர பிரதேச அரசு, காவல் துறை மற்​றும் புல​னாய்வு முகமை​களுக்கு நேபாள தூதரகம் நன்றி தெரிவித்​துள்​ளது. மேலும், இந்​தி​யா​வில் உள்ள நேபாள குடிமக்​கள் போலி வேலை ​வாய்ப்பு சலுகைகள் மற்​றும் சமூக ஊடக ஆசை வார்த்​தைகளுக்கு எதி​ராக விழிப்​புடன் இருக்​கு​மாறு தூதரகம் கேட்​டுக்​கொண்​டுள்​ளது. ஆள் கடத்​தல், உழைப்​புச் சுரண்​டல் மற்றும் நிதி மோசடிகளில் இருந்து தன் குடிமக்​களைப் பாது​காக்க நேபாள அரசு உறு​தி​யுடன் இருப்​ப​தாக அது வலி​யுறுத்​தி​யுள்​ளது.

முன்​ன​தாக, மே 29ம் தேதி நேபாளத்​தின் மனாங் மாவட்​டத்​தின் நாசோன் நகராட்​சி​யில் புதிய மருத்​து​வ​மனை கட்​டிடத்​துக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​ட​தாக காத்​மாண்​டு​வில் உள்ள இந்​திய தூதரகம் அறி​வித்​துள்​ளது. இந்​திய தூதரகத்​தின் துணைத் தூதர் டாக்​டர் ராகேஷ் பாண்டே மற்​றும் நேசன் நகராட்சி தலை​வர் தன்பகதூர் குருங் ஆகியோர் இணைந்து இதற்கு அடிக்​கல் நாட்டினர்.

திட்ட விவரம்: இந்​திய அரசின் சுமார் 56 மில்​லியன் நேபாள ரூபாய் நிதி உதவி​யுடன், ‘உயர் தாக்க சமூக மேம்​பாட்​டுத் திட்டத்தின்' (HICDP) கீழ் இந்த மருத்​து​வ​மனை கட்​டிடம் கட்டப்படுகிறது. இந்த புதிய வசதி சிறந்த சுகா​தார சேவைகளைப் பெற உதவும் என்று உள்​ளூர் பங்​கு​தா​ரர்​கள் நம்பிக்கை தெரி​வித்​தனர். நெருங்​கிய அண்டை நாடு​களான இந்தியா மற்றும் நேபாளத்​தின் இந்த கூட்டு முயற்​சி, நேபாளத்தின் உள் ​கட்டமைப்பு மற்​றும் வளர்ச்​சியை மேம்படுத்துவ​தில்​ இந்​தி​ய அரசின்​ தொடர்ச்​சி​யான ஆதரவைப்பிர​திபலிக்​கிறது.

SCROLL FOR NEXT