இந்தியா

இந்தியாவில் உடல் பருமனால் 4.1 கோடி குழந்தைகள் அவதி: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 4.1 கோடி குழந்​தைகள் அதிக எடையுடனோ அல்​லது உடல் பரு​மனுடனோ அவதிப்​படு​கின்​றனர் என்று உலக உடல் பரு​மன் அறிக்கை 2026 வெளி​யிட்ட தகவலில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யைத் தடுப்​ப​தற்​கான வழி​காட்டு அறிக்​கையை இந்திய மருத்​துவ ஆராய்ச்சி கவுன்​சில் (ஐசிஎம்​ஆர்) இந்த வாரம் வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது:

பாக்​கெட் உணவு​களுக்​குத் தெளி​வான ஊட்​டச்​சத்து குறி​யீடு, விளம்​பரத் தடை, பள்​ளி​களில் சத்​தான உணவு, அதிக கொழுப்​பு, உப்​பு, சர்க்​கரை உள்ள உணவு​களுக்​குக் கூடு​தல் வரி மற்​றும் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். பள்​ளி​கள் மற்​றும் அதன் 50 மீட்​டர் சுற்​றளவுக்​குள் ஆரோக்​கியமற்ற உணவு​களுக்​கான இந்திய உணவு பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யத்​தின் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) தடையை, வழக்​க​மான சோதனை​கள் மூலம் தீவிர​மாக அமல்​படுத்த வேண்​டும்.

அதிக கொழுப்​பு, சர்க்​கரை, உப்பு கொண்ட உணவு​களுக்​குத் தெளி​வான சட்ட வரையறை இல்​லாத​தால் விதி​களை அமல்படுத்து​வ​தில் தொய்வு ஏற்​பட்​டுள்​ளது.

தற்​போதைய நிலை தொடர்ந்​தால், 2030-க்​குள் உலகின் மொத்​தச் சிறு​வர் உடல் பரு​மனில் 11 சதவீதத்​துக்​கும் அதி​க​மான பங்கு இந்​தி​யா​வில் இருக்​கும். மேலும், நாட்​டின் நோய் பாதிப்​பில் 56.4 சதவீதம் ஆரோக்​கியமற்ற உணவு​களாலேயே ஏற்​படு​கிறது. இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT