இந்தியா

4.1 கோடி சிறார்களுக்கு உடல் பருமன் பாதிப்பு: உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக அளவில் உடல் பரு​ம​னால் பாதிக்​கப்​பட்ட சிறு​வர்​கள் அதி​கம் உள்ள நாடு​களில் இந்​தியா முதல் மூன்று இடங்​களுக்​குள் இருப்​ப​தாக அதிர்ச்​சித் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சுமார் 4.1 கோடி சிறு​வர்​களுக்கு இந்த பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உலக உடல் பரு​மன் அட்​லஸ் 2026 அறிக்​கை​யில் சுட்​டிக்​காட்​டப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் 5 முதல் 19 வயதுக்​குட்​பட்ட சுமார் 4.1 கோடி சிறு​வர்​கள் அதிக உடல் எடை​யுடன் இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இதில் 1.4 கோடி பேர் அதீத உடல் பரு​மன் பாதிப்​புடன் இருப்​பது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

          

சீனா மற்​றும் அமெரிக்கா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வும் இப்​பெரும் பிரச்​சினையை எதிர்​கொண்​டுள்​ளது. இதன் மூலம், இந்​தியா ஒரே நேரத்​தில் ஊட்​டச்​சத்​துக் குறை​பாடு மற்​றும் அதி​கரித்து வரும் சிறார் உடல் பரு​மன் பாதிப்பு ஆகிய இரு​முனை சவால்​களை எதிர்​கொண்டு வரு​கிறது.

கடந்த 1975-ல் 4% ஆக இருந்த சிறார் உடல் பரு​மன் பிரச்​சினை, தற்​போது உலக அளவில் 20 சதவீதத்தை நெருங்​கி​யுள்​ளது. வரலாற்​றிலேயே முதல் முறை​யாக உலகள​வில் உடல் எடை குறைந்த சிறு​வர்​களை விட, உடல் பரு​மன் கொண்​ட​வர்​களின் எண்​ணிக்கை பரவலாக அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பல நாடு​கள் இதைக் கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுத்​தா​லும், பாதிப்​பின் வேகத்​திற்கு ஏற்ப தீர்​வு​கள் எட்​டப்​பட​வில்லை என்​பதே நிதர்​சன​மான உண்​மை. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT