இந்தியா

சூரிய மின்சக்தி திட்டத்தில் 40 லட்சம் குடும்பங்கள் பலன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்​பில்​லாத சூரிய மின்​சக்தி பயன்​பாட்டை ஊக்​குவிக்​க​வும் வீடு​களில் மின் கட்டண செலவை குறைக்​க​வும் ‘பி.எம். சூர்ய கர்-முப்த் பிஜிலி யோஜ​னா' எனப்​படும் சூரிய வீடு இலவச மின் திட்​டத்தை மத்​திய அரசு கடந்த 2024 பிப்ரவரி​யில் தொடங்​கியது.

இத்​திட்​டத்​தின் கீழ் நாடு முழு​வதும் 1 கோடி குடும்​பங்​களுக்கு சூரிய மின்​சக்தி உற்​பத்தி அமைப்பை நிறுவ மானி​யம் வழங்​கப்​படு​கிறது. அரசின் இணை​யதளத்​தின்​படி, இத்​திட்​டம் 2027 மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது. இது​வரை 68 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. இதில் 40 லட்​சத்து 21,346 குடும்​பங்​கள் இத்​திட்​டத்​தால் பலன் அடைந்​துள்​ளன.

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யின் கீழ் தொடங்​கப்​பட்ட இத்​திட்​டம், அரசின் சுய​சார்பு இந்​தியா மற்​றும் வளர்ந்த இந்​தியா 2047 ஆகிய​வற்​றின் முக்​கிய தூணாக முன்​னிறுத்​தப்​படு​கிறது.

உலக அளவில் எரிபொருள் விநி​யோகத்​தில் நிலை​யற்ற தன்மை மற்​றும் எரிபொருள் மீதான சார்பு அதி​கரித்து வரும் இக்காலத்தில் பொருளா​தார ஸ்திரத்​தன்​மை, தேசி​யப் பாது​காப்பு மற்​றும் நீண்ட கால வளர்ச்​சிக்கு இத்​திட்​டம் அவசி​ய​மானது என அரசு கருதுகிறது. மின்​சா​ரச் செலவு மற்​றும் வழக்​க​மான எரிசக்தி ஆதா​ரங்​களின் மீதான சார்பை இத்​திட்​டம்​ குறைக்​கிறது.

SCROLL FOR NEXT