இந்தியா

“அரசியல்வாதிகள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்” - புனேவில் 4 வயது மகளை இழந்த தந்தை வேதனை

செய்திப்பிரிவு

புனே: ம​கா​ராஷ்டிர மாநிலம் புனே மாவட்​டம் நஸ்​ராபூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 65 வயது முதி​ய​வர் ஒரு​வர் கடந்த 1-ம் தேதி பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்தார்.

சம்பவ இடத்​துக்கு அரு​கில் வீட்​டில் இருந்த சிசிடிவி காட்​சிகளை வைத்து அவரைப் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அவர் மீது ஏற்​கெனவே 2 பாலியல் வழக்​கு​கள் இருப்​ப​தாக அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர். அவரிடம் மே 7-ம் தேதி வரை விசா​ரணை நடத்த போலீ​ஸாருக்கு நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது.

இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர மாநிலம் டெஹு பகு​தி​யில் உள்ள நதி​யில் 4 வயது மகளின் அஸ்​தி​யைக் கரைக்க வந்த தந்தை செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

நீதி கிடைக்க வேண்டும்: "எனது மகளின் அஸ்​தி​யைக் கரைக்க இங்கு வந்​துள்​ளேன். இதற்​கிடை​யில், மகள் சீரழிக்​கப்​பட்​டதை அறிந்து எனக்கு ஆறு​தல் சொல்ல அரசி​யல் தலை​வர்​கள் பலர் வீட்​டுக்கு வந்து செல்​வ​தாக எனது வீட்​டில் இருந்து உறவினர்​களும், நண்​பர்​களும் என்னை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு தகவல் தெரி​வித்​தனர். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்​டும்.

குற்​ற​வாளிக்கு மரண தண்​டனை வழங்க வேண்​டும். அதுவரை அரசி​யல்​வா​தி​கள் யாரும் எனது வீட்​டுக்கு ஆறு​தல் சொல்ல வர வேண்​டாம் என்று பணிவுடன் கேட்​டுக் கொள்​கிறேன். என் மகளுக்கு நீதி கிடைத்த பிறகு தாராள​மாக எல்​லோரை​யும் சந்திக்கிறேன்." இவ்​வாறு சிறுமி​யின் தந்தை தெரி​வித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் கூறும்​போது, "இந்த வழக்​கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதியவருக்கு மரண தண்​டனை வழங்க வேண்​டும் என்று நீதி​மன்​றத்​தில் மாநில அரசு சார்பில் வலி​யுறுத்தப்படும்" என்​று உறு​தி அளித்​து உள்​ளார்​.

SCROLL FOR NEXT