இந்தியா

உ.பி.யில் உருவானது 3-வது அணி: 403 தொகுதிகளிலும் போட்டி என ஒவைசி - ஆசாத் அறிவிப்பு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச சட்​டப் பேர​வைக்கு அடுத்த ஆண்டு (2027) தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யும், சமாஜ்​வாடி-​காங்​கிரஸ் கூட்டணி​யும் பிர​தான போட்​டி​யாளர்​களாக உள்​ளன. இதில் 3-வது அணி உரு​வாக வாய்ப்பு இருப்​ப​தாக ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகி வந்தது.

இந்நிலை​யில், அகில இந்​திய மஜ்லிஸ்​-இ-இத்​தேஹாதுல் முஸ்​லிமீன் (ஏஐஎம்​ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி​ மற்​றும் ஆசாத் சமாஜ் கட்சி (கான்​ஷி​ராம்) தலைவர் சந்​திரசேகர் ஆசாத்​ஆகியோர் லக்​னோ​வில் நேற்று கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்தனர். அப்​போது ஒவைசி பேசி​ய​தாவது:

ஏஐஎம்​ஐஎம் மற்​றும் ஆசாத் சமாஜ் கட்சி (கான்​ஷி​ராம்) இணைந்து, ‘சமூக பரிவர்த்​தன் மோர்ச்​சா’ (எஸ்​பிஎம்) என்​கிற புதிய கூட்டணி உரு​வாகி​யுள்​ளது. வரு​ம் தேர்​தலில் இந்த கூட்​டணி 403 தொகு​தி​களி​லும் போட்​டி​யிடும். நமது சகோ​தரர் சந்​திரசேகர் ஆசாத், எஸ்​பிஎம் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக​வும், முதல்​வர் வேட்பாள​ராக​வும் இருப்​பார். பாஜக தொடர்ந்து மூன்​றாவது முறையாக ஆட்​சிக்கு வரு​வதைத் தடுப்​பதே இந்த கூட்​ட​ணி​யின் நோக்​க​மாக இருக்​கும். இவ்​வாறு ஒவைசி கூறி​னார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT