கேதார்நாத்: உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியில் உள்ள நான்கு கோயில்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்த யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த யாத்திரைக்கு கடந்த வியாழக்கிழமை வரை 37 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து உள்ளனர்.
இங்கு வந்தவர்களில் 198 பேர் மருத்துவ காரணங்களால் இறந்தனர். 3 பேர் இயற்கை மரணம் அடைந்தனர் என்று உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேதார்நாத் வந்தவர்களில் 95 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.