இந்தியா

ஒடிசாவில் வெள்ளத்தில் சிக்கிய 3.5 லட்சம் பேர் மீட்பு

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் 6 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை குறைந்த பிறகு பல மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.

இருப்பினும் பாலசோர், பத்ராக், ஜாஜ்பூர், கேந்திரபாரா, மயூர்பஞ்ச் மற்றும் கியோன்ஜார் ஆகிய 6 மாவட்டங்கள் இன்னும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. ஆறு மாவட்டங்களில் இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT