இந்தியா

டெல்லியில் ராவணனுடன் சேர்த்து 30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: விஜயதசமியை முன்​னிட்டு, வழக்​க​மான ராவணன், கும்​பகர்​ணன் மற்​றும் மேகநாதன் உரு​வப் பொம்​மை​களு​டன் சேர்த்து டெல்லி பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மையும் நேற்று எரிக்​கப்​பட்​டது.

சிஜேபி-க்கு எதிரான கேலி நட​வடிக்​கை​யாகவே இது பார்க்​கப்​படு​கிறது. கரப்பான்பூச்சி உருவபொம்மையை எரிப்பதுபோன்ற வீடியோ பரவிவருகிறது. இது​குறித்து சிஜேபி நிறு​வனர் அபி​ஜித் திப்கே மற்​றும் சட்​டப்​பி​ரிவு தலை​வர் ரத்னாசிங் கூறும்​போது,“இலவச விளம்​பரத்​துக்கு நன்றி.

இந்த நாட்​டில் வெறும் கூத்​துகளை மட்​டுமே நடத்​திக் கொண்டிருங்​கள்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர். இக்கருத்​துகள் சமூகவலை​தளங்​களில் விவாதங்​களை ஏற்​படுத்​தி​யுள்​ளன. பல பயனர்​கள் கரப்​பான் பூச்சி உரு​வப் பொம்மை எரிப்பை தீமையின் மீதான நன்​மையின் வெற்​றியோடு ஒப்​பிட்​டுப் பேசிவரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT