புதுடெல்லி: துபாயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரின் விரைவில் காலாவதியாகவுள்ள அனைத்து விசாக்கள் மற்றும் இ-விசாக்களும் இலவச அடிப்படையில் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிப்ரவரி 28-ம் தேதிக்கு பிறகு அவர்களின் பயணம் தடைபட்டிருந்தால் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக தங்கியதற்காக அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது. விமானப் போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் வெளியேறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.