ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா பற்றி தகவல் அளித்தால் ரூ.92 கோடி பரிசு: ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

ஈ​ரான் உச்ச தலை​வ​ர் மோஜ்தபா காமேனி

ஈ​ரான் உச்ச தலை​வ​ர் மோஜ்தபா காமேனி

Updated on
1 min read

வாஷிங்டன்: ஈ​ரான் உச்ச தலை​வ​ர் மோஜ்தபா காமேனி உட்பட சில தலை​வர்​கள் பற்றி தகவல் அளித்​தால் ரூ.92 கோடி பரிசு அளிப்​பதாக அமெரிக்கா அறி​வித்​துள்​ளது.

ஈரான் உச்ச தலைவர் அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்ட பிறகு அவரது மகன் மோஜ்தபா காமேனி ஈரான் உச்ச தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். ஆனால், இதுவரை அவர் பொது​வில் வெளியே வரவில்​லை. அயத்​துல்லா காமேனி தாக்​கப்​பட்ட போது, மோஜ்த​பா​வும் படு​கா​யம் அடைந்து கோமா நிலை​யில் உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

ஆனால், அவர் உயிருடன் இருப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்​பு​கிறார். இந்​நிலை​யில் மோஜ்தபா காமேனி மற்​றும் ஈரானின் இஸ்​லாமிக் புரட்​சிப் படை​யுடன் தொடர்​புடைய தலை​வர்​கள் பற்றி தகவல் அளிப்​போருக்கு 10 மில்​லியன் டாலர் (ரூ.92,47,48,000) பரிசு அளிக்​கப்​படும் என அமெரிக்கா அறி​வித்​துள்​ளது.

இதில் அயத்​துல்லாவுக்கு துணை​யாக இருந்த மத குரு அலி அஸ்​கார் ஹிஜாசி, ராணுவ கமாண்​டர் யஹ்யா ரகிம், அரசி​யல் தலை​வர் அலி லாரிஜானி, உளவுத்​தறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப், பாது​காப்பு செய​லா​ளர் உள்​ளிட்ட சில அதி​காரி​களின் பெயர்​களும் உள்ளன.

<div class="paragraphs"><p>ஈ​ரான் உச்ச தலை​வ​ர் மோஜ்தபா காமேனி</p></div>
நொய்டாவில் புதிய சர்வதேச விமான நிலையம்: ஜெர்மன் - இந்தியா பிஸினஸ் அலையன்ஸுடன் உ.பி. அரசு ஒப்பந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in