இந்தியா

பெற்றோர்களை கவனிக்​காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டு சிறை: கேரள முதல்வர் வி.டி.சதீசன் தகவல்

செய்திப்பிரிவு

கொல்​லம்: மூத்த குடிமக்​களின் பராமரிப்பு மற்​றும் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக கேரள சட்​டப்பேர​வை​யில் கடந்த மாதம் புதிய சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது.

கொல்​லம் மாவட்​டம் பதனாபுரத்​தில் முதி​ய​வர்​களுக்​காக ரூ.20 கோடி மதிப்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள நவீன தங்​குமிடத்​தைத் திறந்து வைத்​துப் பேசிய முதல்​வர் முதல்​வர் வி.டி. சதீசன், இந்த புதிய சட்​டத்​தில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சம் குறித்து விளக்கி​னார்.

அவர் கூறுகை​யில்​, “மு​தி​யோ​ருக்​குப் பல்​வேறு உரிமை​களை வழங்​கும் வகை​யில், உலகில் வேறு எங்​கும் இல்​லாத ஒரு சட்டத்தை எனது அரசு நிறைவேற்​றி​யுள்​ளது.

பெற்​றோரின் சொத்துகள் அனைத்​தை​யும் பெற்​றுக்​கொண்ட பிறகு அவர்களைப் புறக்​கணிக்​கும் பிள்​ளை​களுக்கு 3 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதிக்​கும் பிரிவை இந்​தச் சட்​டத்​தில் நான் வேண்​டுமென்றே சேர்த்​துள்​ளேன்.

எனவே, யாரும் கவலைப்பட வேண்​டாம். இந்​தச் சட்​டத்​துக்கு ஆளுநரின் ஒப்​புதல் கிடைத்து நடை​முறைக்கு வந்​தவுடன், பெற்றோரின் சொத்​துகளைப் பெற்​றுக்​கொண்டு அவர்​களைக் கைவிடு​பவர்​கள் நிச்​சய​மாகச் சிறைக்கு அனுப்​பப்​படு​வார்​கள். கேரளத்​தில் எந்​தவொரு முதி​ய​வரும் தனிமை​யில் விடப்​படக் கூடாது என்​பதே எனது மிகப்​பெரிய கனவு” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT