இந்தியா

முகத்தில் கேக் பூசிய தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை - உ.பி.யில் பிறந்த நாள் விழாவில் விபரீதம்

செய்திப்பிரிவு

புலந்த்சாகர்: உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது தொடர்​பாக ஏற்​பட்ட தகராறில் 3 பேர் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொல்லப்பட்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்​சாகர் நகரின் குர்ஜா நகர் பகுதியில் சனிக்​கிழமை இரவு ஜீது சைனி என்​பவரின் பிறந்த நாள் விழா நடை​பெற்​றது. இந்த விழா​வில், சைனி​யின் முகத்​தில் அவரது நண்​பர்​கள் சிலர் கேக் பூசி​ய​தாகக் கூறப்​படு​கிறது. அப்போது இரு தரப்​பினர் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்பட்டுள்ளது. பின்​னர் ஒரு​வர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தாகக் கூறப்படு​கிறது.

இது குறித்து புலந்த்​சாஹர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அந்​தரிக்ஷ் ஜெயின் கூறும்​போது, "துப்​பாக்​கிச் சூடு குறித்து தகவல் கிடைத்​ததும் குர்ஜா நகர் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்​தனர். துப்​பாக்​கிச் சூட்​டில் படு​காயமடைந்த 3 இளைஞர்களை மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்​றனர். ஆனால், அவர்​கள் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் அறி​வித்​தனர்.

தப்பி ஓடிய குற்​ற​வாளி​களைக் கைது செய்ய 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. குற்​ற​வாளி​களில் ஒரு​வரது பிறந்த நாளின் போது கேக் பூசி​ய​தால் ஏற்​பட்ட தகராறே இந்த கொலைக்​குக் காரணம் என்று குடும்​பத்​தினர் தெரி​வித்​துள்​ளனர். சில சந்​தேக நபர்​களை போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரித்து வரு​கின்​றனர்" என்​றார்.

SCROLL FOR NEXT