இந்தியா

விஜயவாடாவில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விஜயவாடா: ​விஜய​வாடா புதிய பைபாஸ் சாலை​யில் ஒரு கார் சென்று கொண்​டிருந்​தது. அப்​போது பின்​னால் வந்த கண்​டெய்​னர் லாரி​யின் டயர் பஞ்​சர் ஆனதால் நிலை தடு​மாறி முன்​னால் சென்று கொண்​டிருந்த அந்​தக் காரின் மீது மோதி​யது.

இந்த கோர விபத்​தில் காரில் பயணம் செய்த ஜெயமங்கள நாக துர்கா மற்​றும் அவரது மகன் நாக​ சாய் மற்​றும் பைக்​கில் எதிரே வந்த சிங்​நகரை சேர்ந்த வெங்​கடேஸ்வர ராவ் (50) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். காரில் இருந்த விஜயகு​மார் படு​கா​யம் அடைந்தார். சம்பவ இடத்து சென்ற போலீ​ஸார் அவரை விஜயவாடா அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி வைத்​தனர்​.

SCROLL FOR NEXT